• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,650 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

அணுஉலையில் முதலீடு செய்வதோ பல்லாயிரம் லட்சம் கோடிகள் – நஷ்டயீடோ வெறும் 300 கோடிகள் மட்டும்

என்ன நம்ப முடிகிறதா? இது நாங்கள் சொல்லும் செய்தி அல்ல. முதலாளித்துவ பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா (25,07/2009, http://mobiletoi.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=10&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=25-07-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar01003&publabel=TOI) சொல்லும் செய்தி.

அதாவது, அணுஉலையை இயக்கம் போது எதிர்பாராத விபத்து நிகழும் போது, அந்நிறுவனம் வெறும் 300 கோடிகள் மட்டும் நஷ்டயீடாக வழங்கும். அதற்கு மேல் வரும் செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கான மசோதா நாடாளமன்றத்தில் நிறைவேற்றபடவுள்ளது.

இந்திய மக்களின் வரிபணத்தில் அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய முதலாளிகள் அடிக்கும் கொள்ளையோ பல்லாயிரம் லட்சம் கோடிகள். ஆனால், விபத்து நடந்து அதனால் மக்கள் பாதிக்கப்பட்டால், நஷ்டயீடு கொடுப்பதும் இந்திய மக்களின் வரிபணத்தில்.

இந்த ஓட்டு பொறிக்கிகள் நாட்டை எதற்காகவும் விற்க தயங்கமாட்டார்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

இப்போது சொல்லுங்கள், அணு ஒப்பந்தம் சாதனையா? அல்லது சோதனையா?

அணு ஒப்பந்தம் என்பது வெற்றியா? அல்லது அடிமை சாசனமா?

வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு விரைவில் அனுமதி

கீழ்கண்ட செய்தியை படித்தாலே புரியும் அரசின் கல்விக் கொள்ளை(கொள்கை).

—————————————————————————————————————————————————–

“வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் (07/07/2009), கேள்விநேரத்தின் போது அவர் கூறியது:

இந்தியாவைப் பொறுத்தவரையில்,உலகத்தரமான கல்வியைத் தரும் நாடாக அமைய வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டே, வெளிநாட்டு பல்கலை கழகங்க ளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அனைவருக்கும் அடிப் படை கல்வி தொடர்பான மசோதா, நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.

இத்துறையின் இணையமைச்சர் புரந்தேஸ்வரி கூறுகையில், கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்என்ற அந்தஸ் தினை வழங்க, பேராசிரியர் ஜோஷி தலைமையில்,கடந்த 2004ம் ஆண்டு 13 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. யூ.ஜி.சி.,யின் சட்டதிட்டங்களையும்,வழிகாட்டுதல்களையும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.குறைந்தபட்சம் 75 சதவீதம் தகுதியுடைய படிப்புகளை அந்த நிறுவனம் கொண்டிருக்க வேண்டும் என்றார் (தினமலர், ௦08/07/2009).

—————————————————————————————————————————————————–
அரசின் உண்மைமுகம் அம்பலம்:

உலக தரமான கல்வி அளிப்பது தான் தற்போது இந்தியாவிற்கு தேவையா? அல்லது அனைவருக்கும் அரசின் இலவச கல்வி கிடைப்பது அவசியமா?

உலக தரமான கல்வியால் பயன்பெறுவது பன்னாட்டு கம்பெனி முதலாளியா? அல்லது இந்தியாவா?

அதென்ன குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 75 சதவீதம் தகுதியுடைய படிப்புகளை அந்த நிறுவனம் கொண்டிருக்க வேண்டும்? இதுதான் அரசின் கல்வி தனியார்மைய கொள்ளை(கொள்கை).

இப்போது புரியும், அரசின் அனைவருக்கும் அடிப் படை கல்வி என்பது காகித சட்டம் மட்டுமே. கல்வி தனியார் மையம் தான் நடைமுறை.

பத்தாயிரம் கோடிகளை கொடுத்து வாங்கப்படும் தீ விபத்தில் கருகிப்போன போர்க்கப்பல்… ஆனால்,உயர்கல்விக்கு வெறும் 9596 கோடிகள் மட்டுமே?

ரஷ்யாவின் பழைய போர்க்கப்பல், “கோர்ஷ்கோவ்’ வாங்குவதில் பல ஆயிரம் கோடி ரூபாய் விரையம் ஆகி வருவதாக மத்திய தணிக்கைத் துறை கண்டித்துள்ளது. 2004ல், அப்போதிருந்த பா.ஜ., அரசின் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ரஷ்யா சென்று ஆலோசனை நடத்தி, “கோர்ஷ்கோவ்’ போர்க்கப்பலை வாங்க ஒப்பந்தம் போட்டார்.

அதன் பின் , காங்கிரஸ் அரசு தொடர்ந்து பேசி புது ஒப்பந்தம் போட்டது. ரஷ்ய கடற்படையில் ஏற்கனவே உழைத்த இந்த கப்பல், பழசாகி விட்டதுடன், தீ விபத்துக்கும் உள்ளாகி இருந்தது. இருந்தும் அதை பழுது பார்த்து, மீண்டும் புதுப்பித்தால், 20 ஆண்டுகள் உழைக்கும் என்று உறுதி கூறப்பட்டது. இந்த கப்பல் இன்னும் தயாரானபாடில்லை.

எனினும், இதே அளவுள்ள புதிய போர்க்கப்பலை வாங்கும் செலவை விட, இரு மடங்கு செலவு இது. ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் பாதி அளவு இது. மேலும், போபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தை விட, பலமடங்கு அதிக மதிப்புள்ளது.இந்த கப்பல், 2013ல் டெலிவரி செய்யப்படும் என்று இப்போது சொல்லப்பட்டுள்ளது. விலைவாசி ஏறியுள்ள நிலையில், கப்பலுக்கான தொகையை மீண்டும் ரஷ்யா ஏற்றி உள்ளது. இப்போது போட்டுள்ள மதிப்புபடி, 10 ஆயிரம் கோடியை தாண்டும்.

“இதுவரை போட்ட ராணுவ திட்டங்களில் மிக அதிக மதிப்புள்ள திட்டம் இது. அதில், மக்கள் பணம் மிக அதிகளவில் விரையம் ஆவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த விரைய பணத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. 2007க்குப் பின், இது தொடர்பான ஆவணங்கள் எதையும் ராணுவ அமைச்சகம் தராததால், எங்களுக்கு போதிய தகவல் இல்லை’ என்று தணிக்கைத் துறை தலைவர் அரவிந்த் குமார் அவாஸ்தி கூறினார் (தினமலர், 30/07/2009).

இது எவ்வளவு பெரிய ஓட்டுபொறுக்கிகளின் துரோகம்? இதற்கு மேல் இந்த செய்திக்கு எந்த இணைப்புரையும் தேவை இல்லை.

ஆனால், இந்தியாவின் உயர்கல்விக்கு திட்டமிட்ட ஒதுக்கிடு 9596 கோடிகள் மட்டுமே? http://indiabudget.nic.in/ub2009-10/eb/stat02.pdf

அரசு கல்வியை கைகழுவி விட்டது என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை?