• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,339 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

மும்பையில் 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலம்….

ஐ நா மற்றும் மனிதவள வளர்ச்சி அறிக்கை சொல்லும் செய்தியை கேட்டால், இதைவிட வேறு எந்த அவலமும் இல்லை என்றே சொல்லலாம் (டைம்ஸ் ஆப் இந்தியா, 02/09/2009).

மும்பையில் சொகுசு பங்களாக்கள் 10 கோடி இருந்து 25 கோடி வரை விற்கப்படுகின்றன.

ஆனால், 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலமும் இதே மும்பையில் தான் நடக்கிறது.

மேலும், 10% மக்களின் வருமானமோ ரூபாய் 600 க்கும் குறைவு!

இது தான் சமூக நியதியா?

இந்த 54% மக்கள் இல்லாமல் மும்பை இயங்கிவிடுமா?

இது தான் முதலாளித்துவத்தின் சாதனையோ?

இந்த பிஞ்சு குழந்தையின் பரிதவிக்கும் நிலைமைக்கு யார் காரணம்?

IMG_3397

தனியார்மயத்தின் கோரம்: அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டம்மை நோயினால் பரிதவிக்கும் குழந்தை (ஆகஸ்டு 2009 புதிய ஜனநாயகம்).
முதலாளிகளுக்கு சொத்து குவிப்பது திறமையாலா? அல்லது மக்கள் பணத்தை கொள்ளையடித்தா?

 5 விமான நிலையங்களை அனில் அம்பானிக்கு வெறும் 63 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்த கேவலம்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு. 95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC).

 

இது, மக்களின் சொத்தை அம்பானி சும்மா எடுத்து கொண்டது தான் . ஆனால் அரசு எடுத்த முடிவு இது. வேறு நிறுவனங்களுக்கு என்றால் இதைவிட 5 மடங்கு அதிக தொகை கிடைத்திருக்கும், என்று மகாராஷ்ட்ர தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

யாவர்மால், நான்டெட், லாத்தூர், உஸ்மானாபாத் மற்றும் பாராமதி விமான நிலையங்களைத்தான் இப்படி தூக்கிக் கொடுத்துள்ளனர். வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமானங்களை, ஏதோ பாம்பே அல்வா மாதிரி 95 வருடத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் (டைம்ஸ் ஆப இந்தியா, 7/08/2009). நன்றி: என்வழி

 

முதலாளித்துவ அறிவுஜீவிகளே:

 

இப்போது சொல்லுங்கள் இதுதான் முதலாளித்துவத்தின் திறமையா?

 

இந்திய அரசு என்பது தரகு முதலாளிகளுக்கு தான் உள்ளது என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் தேவை?

தனியார்மயம் என்றாலே தரம் தான், ஆனால் 135 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50% சீட்கள் கூட நிரம்பவில்லை?

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 749 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப் பட்டனர் (தினமலர் 11/08/2009).

 

இதில், 39 ஆயிரத்து 657 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 421 பேர் “இடம் வேண்டாம்’ என தெரிவித்தனர்.

 

பொதுப்பிரிவு மாணவர்களுக் கான பொறியியல் கவுன்சிலிங் முடிவில், 31 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு 92 புதிய கல்லூரிகள் உட்பட,மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.ஆர்க்., படிப்பு வழங்கும் ஆறு கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 446 கல்லூரிகள் உள்ளன.

 

32 கல்லூரிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. ஆறு கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்க ளே நிரம்பியுள்ளன.

 

தனியார்மயம் என்றாலே தரம் தான் என்று சொல்லும் ஏன் கவுன்சிலிங் முடிவில் 31 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக உள்ளன?

 

இந்த ஆண்டு மட்டும் 92 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்று தொடங்கப்பட்டதா? அல்லது கல்வி கட்டணக்கொள்ளை மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கப்பட்டதா?


விநாயகா மிஷன் பல்கலைக்கழக சேர்மன் சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா?

 

 

hi  

சேலம் விநாயகா மிஷன் பல்கலை சேர்மன் மற்றும் வேந்தருமான சண்முகசுந்தரம் – அன்னபூரணி, 70வது பிறந்த தினம் மற்றும் திருமண வைபோக ஆடம்பர விழா நடத்தியதற்கான செலவு மற்றும் யானை, குதிரை சகிதமாக குறுநில மன்னர் போல வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இரண்டு நாள் நடத்திய சோதனை மூலம், பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து விவரம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அரியானூரில் மிகப் பிரம்மாண்ட முறையில், விநாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரத்துக்கு சொந்தமான மாளிகை மற்றும் விநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ளன. பல ஏக்கர் பரப்பிலான நிலத்தை வாங்கி, வீட்டையே அரண்மனை போல கட்டி சண்முகசுந்தரம் குடியிருந்து வருகிறார்.

விநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ள அந்த பகுதி முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவக் கல்லூரி, ஏற்காடு அடிவாரத்தில் பார்மசி கல்லூரி, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் மருத்துவமனை என, விநாயகா மிஷன் பெயரில் சொத்துக்குள் வாங்கி குவிக்கப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் சண்முகசுந்தரம் லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, இரண்டாவது அக்ரஹாரத்தில் விநாயகா மருத்துவமனை கட்டி, அதில் குடியிருந்து வந்தார்.

பின், விநாயகா மிஷன்ஸ் சார்பில் பல் வேறு கல்லூரிகளை திறந்து, குறுகிய காலத்தில் சொத்துக் களை வாங்கி குவித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. சண்முகசுந்தரத்தின் விஸ்வரூப வளர்ச்சியின் பின்னணி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சண்முகசுந்தரம் ஒவ்வொரு பிறந்த நாளையும் யானை, குதிரைகள் சகிதம் கல்லூரி மாணவ, மாணவியருடன் பிரம்மாண்ட விழா, பேரணி என பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடத்துவது வழக்கம்.

சில வாரங்களுக்கு முன், சண்முகசுந்தரத்தின் 70வது பிறந்த நாள் விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப் பட்டது. விலை உயர்ந்த ஜாதிக் குதிரைகளை தேரில் பூட்டி, ஏற்காடு அடிவாரத்தில் இருந்து மன்னர்களை போல வீதி உலா சென்றார். உடன், குதிரைப்படை வீரர்கள் உடை அணிந்து ஊழியர்கள் இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.அரியானூரில் விநாயகா மிஷன் சார்பில், 1,008 லிங்கம் அமைந்த சிவன் கோவிலில் கோலாகல பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிரபலமான வி.வி.ஐ.பி.,க் கள் பலர் கலந்து கொண்டனர். அஸ்வமேத யாகத்தை சண்முகசுந்தரம் நடத்தினார். சண்முகசுந்தரம் குறுநில மன்னரை போல அரண்மனை வாழ்க்கை குறித்தும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம், அணிவகுத்து நிற்கும் விலைமதிப்பு கூடிய கார், ஜீப், வேன் என அவரது டாம்பீகமான நடவடிக்கை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று மாதமாக ரகசியமாக கண் காணித்து, முக்கிய ஆதாரங் களை சேகரித்த பின்னரே, பல்கலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அரண்மனையில் இருப்பது போல தேர், குதிரை லாயம், கேரளாவில் இருந்து வாங்கப் பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை சொந்தமாக உள்ளன. உயர் ஜாதிக் குதிரையை பராமரிக்க பணியாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விநாயகா மிஷன் பல்கலை இணை வேந்தராக அவரது மகன்கள் சரவணன், கணேசன், டைரக்டர்களாக அவரது மகள்கள் அருணாதேவி, சுமதி ஆகியோர் உள்ளனர்.இரண்டு நாட்களாக கோவை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கூடுதல் இணை இயக்குனர் ஜெயராமன், சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குனர் கருப்புசாமி தலைமையிலான அதிகாரிகள் முக்கிய ஆவணம், பல கோடி ரூபாய்க்கான சொத்து விவரம், மாணவர் சேர்க்கை கட்டண ரசீது ஆகியவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

வருமான வரித்துறையின் தொடர் விசாரணை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதன் மூலம், மாணவர் சேர்க்கையில் கூடுதல் நன்கொடை வசூலித்து பணம் சம்பாதிக்கப்பட்டதா என்றும், வேறு வழிகளில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது போன்ற முக்கிய விஷயங்கள் வெளிவரும் (தினமலர், ஆகஸ்ட் 15,2009).

——————————————————————————————லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, நேர்மையாக உழைத்து, ஒரு மனிதன் குறுநில மன்னன் ஆக முடியுமா?

சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா?

குறுநில மன்னன் வாழ்க்கை நடத்தும் ஒருவன் எப்படி தரமான கல்வி கொடுக்க முடியும்?

ஏன், குறுநில மன்னனுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும்?

நடுத்தர வர்க்க மக்களே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கட்டும் பணம் எங்கே போகிறது என்று தெரிகிறதா?

தனியார்மயம் தான் தலைசிறந்தது என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே இதுதான் தரமா?

 

 


பன்றி காய்ச்சல் நோய்க்கு தனியார் மருத்துவமனைகளின் சேவையோ சேவை?

இப்போது இந்திய முழுவதும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு தனியார் மருத்துவமனைகளை பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளை அமைக்க கோரியது. அதுமட்டுமில்லாமல், அரசு கிங் நிறுவனத்தில் டெஸ்ட் செய்ய உதவும் என்றும் சொல்லியது. ஆனால், ஒரு தனியார் மருத்துவமனையும் இதற்கு முன்வரவில்லை. இதற்கு அவர்கள் கூரிய காரணம், அவர்களுடைய மருத்துவமனை கட்டடங்கள் தனி வார்டுகளை அமைக்க வசதியாக இல்லை என்று (டைம்ஸ் ஆப் இந்தியா, 12/08/2009).

உண்மையிலேயே அவர்கள் நினைத்தால் தனி வார்டுகளை அமைக்க முடியாதா?

நாடே பன்றி காய்ச்சலால் அவதி படும்போது தனியார் மருதுவமனைகளால் இது கூட செய்ய முடியாதா?

ஆபத்து காலத்தில் உதவி செய்யாத தனியார் மருதுவமனைகளால் நாட்டிக்கு என்ன பயன்?

தனியார் மருத்துவமனைகளின் ஒரே நோக்கம் லாபம் மட்டும் தான?

தனியார்மயம் தான் சரி என்று சொல்லுபவர்களே, இப்போது சொல்லுங்கள் இதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் தரமா?

தனியார் மருத்துவமனைகளின் தரம் இதுதான்:

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் சொல்கிறார், “சில தனியார் மருத்துவமனைகள் யுனானி, ஆயுர்வேத டாக்டர்களை பயிற்சியில் உள்ள டாக்டர்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்”. சில மருத்துவமனைகள் ஆயாக்களுக்கு நர்ஸ் உடை அணிவித்து நிறுத்தி விடுகின்றன (தினமலர் 28/05/2009).

இப்போது சொல்லுங்கள் தனியார் மையத்தின் உண்மை முகம் சேவையா? தரமா? அல்லது லாபம் மட்டும் தானா?

இந்தியா – வல்லரசு; ஆனால், நான்கில் ஒரு இந்தியருக்கு உணவில்லை…

இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய வளம்மிக்க நாடு, ஆணு ஆயுதம் வைத்துள்ள சக்திவாய்ந்த நாடு, மிகப்பெரிய ஜனநாயகத்தை செவ்வனே நடத்திவருகிற நாடு என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். அரசு மட்டுமில்லை, 2020 – ல் வல்லரசாகுமாம்???

—————————————————————————————-

இந்தியாவில் மக்களின் உணவு நிலை குறித்து மும்பை நவதான்யா அறக்கட்டளை என்று தொண்டுநிறுவனம் ஒரு கருத்துக்கணிபை நடத்தியது.

அதவாது இந்தியாவில் உள்ள மக்களில் 4 ல் ஒருவருக்கு உணவு இல்லை.

ஆனால் இந்த பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு பட்டினி கிடப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்கிறது இந்த புள்ளி விபரம். மேலும் இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர். குழந்தைகள் எடை குறைவுக்கு ஆவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை.

1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 189கிலோ என்றிருந்தது 2001 ஆம் ஆண்டு 152 கிலோவாக குறைந்துவிட்டது (தினமலர், 30/07/2009).

————————————————————————————————

இந்திய பொருளாதாரத்தை திறந்துவிட்டதால் தான் வேலை வாய்ப்பு பெருகி உள்ளது, தனியார்மயம் தான் தலைசிறந்தது என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே, 1991 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பின்படி இருந்த இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 189கிலோ இருந்து 2001 ஆம் ஆண்டு 152 கிலோவாக குறைந்துவிட்டது தான் முன்னேற்றமா?

ஐ. டி. அறிவுஜீவிகளே, நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?

ஒரு மனிதன் உண்மையிலேயே சுகபோக வாழ்க்கை வாழ்கிறான் என்றால் தன்னுடைய வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவேண்டும். அப்படி இல்லையென்றால், அது அடிமை வாழ்க்கை தான்.அந்த முக்கிய நிகழ்ச்சியில் தான், மகபேறு காலமும் அடங்கும்.

ஐ. டி. அறிவுஜீவிகளே உங்கள் கம்பெனி எத்தனை நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகபேறு விடுமுறையாக குடுக்கிறது? ஐ. டி. யில் வேலை செய்யும் பெண்கள், சம்பளத்துடன் 6 மாதம் விடுமுறை எடுக்க முடியுமா? குறைந்த பட்சம், சம்பளம் இல்லாமல் 7 மாதம் விடுமுறை எடுக்க முடியமா?

இதோ மத்திய அரசின் விடுமுறை விபரம்:

மகபேறு காலத்தின் போது ஆணுக்கு 15 நாட்களும், பெண்ணூக்கு 180 நாட்களும் விடுமுறையாக கொடுக்கயிருக்கிறது. தற்போது இது 135 நாட்களாக உள்ளது. (டைம்ஸ் ஆப் இந்தியா, 25/07/2009)

தனியார்மையம் தான் சரி என்று சொல்லும் ஐ. டி. அறிவுஜீவிகளே, இப்போது சொல்லுங்கள் நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?