• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 218,814 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்யும் வங்கிகள்!

நிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம். நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை கொண்ட, உலகின் மிகப்பெரிய தேசங்கடந்த வங்கி நிறுவனங்களான ABN Amro, ING, Raboபோன்றன, பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்கின்றன.

ஒவ்வொருநாளும் சராசரி 48 பேர் உலகின் எங்காவது ஒரு இடத்தில் நிலக்கண்ணி வெடிக்கு பலியாகினறனர். Alliant Techsystems, General Dynamics, Textron போன்ற நிலக்கண்ணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், வங்கிகள் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் வழங்குகின்றன. உலகில் மிக மோசமான அழிவு சாதனமாக கருதப்படும், “Cluster Bomb” உற்பத்தி செய்யும் Alliant, L3 Communications, Lockheed Martin, Northrop Grumman, Raytheon ஆகிய நிறுவனங்களிலும் இந்த வங்கிகள் முதலீடு செய்து, மனித அழிவில் பணம் சம்பாதிக்கின்றன. இது குறித்து வங்கிகள் தகவல் தர மறுக்கின்றன. தாம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதில்லை என்று நழுவுகின்றனர். அதேநேரம் இந்த அழிவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருப்பதால், முதலீட்டாளரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், இந்த வங்கிகளின் முதலீடுகள் குறித்த விபரங்கள் தெளிவாக காணக்கிடைக்கின்றன.

மக்கள் வங்கியில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தை, அல்லது பங்கு முதலீட்டை எடுத்து இந்த வங்கிகள் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, அல்லது கடனுக்கான வட்டிகளை சம்பாதிக்கும் வங்கிகள் அவற்றில் ஒரு சிறுபகுதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு கொடுக்கின்றன. இதனால் அதிக பயனடைவது வங்கிகள் தான். இவ்வாறு வங்கிகளுக்கு கிடைக்கும் மொத்த வருடாந்த லாபம் 3 டிரில்லியன் யூரோக்கள்! (3.000.000.000.000) இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக கொண்டிருக்கும் வங்கிகள் உலகிலேயே சக்திவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.

சர்வதேச சட்டங்களையும் வங்கிகள் மதிப்பதில்லை. சீனாவுக்கு ஆயுத ஏற்றுமதி சம்பந்தமான தடை இருந்த காலத்தில் அந்நாட்டிற்கு யுத்த ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்பட்டது. சீனா அந்த ஹெலிகாப்டர்களை பின்னர் சர்வதேச தடை இருக்கும் இன்னொரு நாடான சூடானுக்கு விற்றது. சூடான் இராணுவம், டார்பூர் பிராந்தியத்தில் நடக்கும்போரில் மக்களை படுகொலை செய்வது தொடர்பாக சர்வதேச கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் EAD என்ற ஐரோப்பிய நிறுவனம், அதிலே முதலீடு செய்யும் ABN Amro வங்கி, என்பன சர்வதேச சட்டங்களை தெரிந்து கொண்டே மீறும் குற்றத்தை புரிந்துள்ளன. இதிலே வேடிக்கை என்னவென்றால், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ABN Amro வங்கியின் ஆணையராக பதவி வகுப்பது தான். இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளை (Novib என்ற NGO)பகிரங்கப்படுத்திய போது, எந்த வங்கியும் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் சுற்றுச் சூலை மாசு படுத்தும் சுரங்க கம்பெனிகளிலும் வங்கிகள் முதலீடு செய்கின்றன. இந்தோனேசியாவில் பொஸ்பேட் கணிமவளத்தை அகழும் Freeport McMoran என்ற நிறுவனத்தில் ABN Amro முதலீடு செய்திருந்ததை ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பு அம்பலப்படுத்திய பின்னர், வங்கி அந்த ப்ரொஜெக்டில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போதும் சர்ச்சைக்குரிய Freeport McMoran நிறுவனத்தில் கணிசமான பங்குகளை ABN Amro வைத்திருக்கின்றது. பொஸ்பேட் அகழ்வு வேலைகளால் இந்தோனேசியாவில் நீர், நிலம் மாசடைந்ததுடன், சுற்றாடலில் வாழும் மக்களும் நோயாளிகளாகியுள்ளனர். இந்தியாவிலும் (ஒரிசாவில்) இது போன்ற சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவன அகழ்வு திட்டங்களுக்கு நெதர்லாந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றன. இது போன்ற சூழலை மாசுபடுத்தும் திட்டங்களுக்கு, வங்கிகள் முதலீடு செய்யாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க முடியாது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி “Wall-Mart” நிறுவனத்திற்கு சொந்தமான, பங்களாதேஷில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி 17 மணிநேரம் கட்டாயவேலை வாங்கப்படுகின்றது. குழந்தைகளின் உற்பத்தித்திறன் குறையும் போது, அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். Wall-Mart மனித உரிமை மீறல்களை புரிவதாக அமெரிக்காவின் Human Rights Watch கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நெதர்லாந்தின் பெரிய வங்கிகள் யாவும், குழந்தை தொழிலாளரை சுரண்டும் Wall-Mart ல் முதலீடு செய்து வருகின்றன.

எந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் பொது மக்களின் பணத்தை எடுத்து, தீய காரியங்களில் முதலீடு செய்யும் வங்கிகள், இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிப்பதில்லை. மனித அழிவுக்கும், மனித உரிமை மீறலுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடி காரணமாக இருந்தாலும், இவற்றில் முதலிடும் வங்கிகளுக்கும், தெரிந்து கொண்டே பணம் வைப்பிலிடும் மக்களுக்கும் மறைமுகமான பொறுப்பு இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய “Bank Secrets” (மூல மொழி:நெதர்லாந்து, ஆங்கில தலைப்புகளுடன்)வீடியோவை பின்வரும் தொடுப்பின் மூலம் பார்வையிடலாம். Zembla (English)

ACE Bank MovieThe documentary tells about ACE Bank, educational project and set-up game by Netwerk Vlaanderen. This unethical bank goes for the highest returns and invests in such unethical activities as weapon systems, companies involved in child labor and human rights violations, heavy environment pollution etc. Curious how the passers-by and the clients reacted? Watch the film and find out!

Part 1
Part 2
_________________________________________

முதல் பதிவு:  கலையகம்


அமெரிக்க மாமாவின் அன்பு பரிசு!

அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன?

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009).

ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. இந்த மருத்துவக்கல்லூரி, தனியார் எம் ஜி ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கையை செய்துள்ளது.

இதனால், உச்சநீதிமன்றம் 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனாலும், இன்று வரை கல்லூரி வலைத்தளத்தில் ” இந்திய மருத்துவ கவுன்சில்”, “பல்கலைக்கழக மானிய குழு” ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (http://www.acsmch.ac.in/profile.html).

——————————————————
ஏன், அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஏன், 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்கும் நாடகம்?

எது, ஏ. சி. சண்முகத்தை கைது செய்வதை தடுக்கிறது? அப்போ, கல்வி கட்டணக்கொள்ளை அரக்கன்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை இல்லையோ? இது தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதின் அர்த்தமோ?
——————————————-

இக்கல்லூரி பண்ணிய கூத்துகள்:

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 25/09/2008 அன்று தொடங்கி வைத்தார்.

எப்படி அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத மருத்துவக்கல்லூரியை மாநில ஆளுநர் தொடங்கி வைக்கிறார்?

சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத ஒரு கல்வி நிறுவனம் தான் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா இய‌க்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நவம்பர் 14ஆ‌ம் தே‌தி கெளரவ முனைவ‌ர் பட்டம் வழங்கியது.

அது மட்டுமில்லாமல், விஜய், சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா ஆகியோருக்கு 6/12/2008 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இவை எல்லாம் பகட்டு நாடகம் தானே? இல்லை இது தான் தனியார் கல்வியின் தரமோ?

இவர்கள் எல்லாம் யார் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களோ?

—————————————————————–
கல்விக்கட்டனக் கொள்ளைக்கு அரசே துணை என்பதை இந்த சம்பவத்தைவிட வேறு என்ன வேண்டும்?

மாணவர்களே!

தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

அமெரிக்க வல்லரசு! ஆனால் 4.9 கோடி மக்கள் பட்டினி!

அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,”பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது’என்றனர் (தினமலர்,  24/11/2009)

————————————————————————————–

முதலாளித்துவ அறிவுஜீவிகளே!

இந்தியா வல்லரசு ஆகவேண்டும். அதற்காக விவசாய, பழங்குடி மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் கவலை இல்லை பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே உலக வல்லரசின் (அமெரிக்கா) உண்மை நிலைமை இது தான்.

நாட்டின் பெரும்பான்மை மக்களை சாவின் விளிம்புக்கு தள்ளிவிட்டு, மிக சொச்சம் பேர் மட்டும் சுகபோகமாக வாழ்வது தான் உங்கள் கொள்கையா?

இது தான் நீங்கள் விரும்பும் வளர்ச்சியோ?

மாணவர்களே!

அமெரிக்க சொர்க்கபுரி, முதலாளித்துவமே சிறந்தது என்பதெல்லாம் நம்மளை ஏமாற்றவே.

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.

சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, ‘மீட்டிங்’ என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். ‘சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.

காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர் (தினமலர், 19/11/2009).

——————————————————————–

//’சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.//

முதலாளித்துவ அறிவுஜீவிகளே!
தனியர்மையத்தின் உயிர் நாடியே இலாபம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

இப்போது சொல்லுங்கள், தனியார்மயத்தினால் தான் வேலை கிடைக்கிறதா? அல்லது இலாபம் கிடைப்பதால் மட்டுமே தனியார்மயம் வேலை கொடுக்கிறதா?

//பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.//

இது தனியார்மய பயங்கரவாதம் அல்லாமல் வேறு என்ன?

ஐ டி அறிவுஜீவிகளே!

இப்போதாவது தொழிச்சங்கத்தின் தேவை புரிகிறதா?

ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோடி

tblfpnnews_36043512822

சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டு களில் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், பின்னர் வறுமை நிலை கூடிக் கொண்டே போக பல காரணங்கள் உள்ளன. சமீப ஆண்டுகளில், உலக பொருளாதார நெருக்கடியால் பல விளைவுகள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏழை நாடுகளில் வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக சொத்துக்களை இழக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது; பல பொருட்களை விற்பது மட்டுமின்றி, கல்வி உட்பட பல செலவுகளை குறைத்துக்கொள்ளும் நிலையும் நடுத்தர குடும்பங்களுக்கு பழகி வருகிறது. இது ஆபத்தான திருப்பம். இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டில், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக 100 கோடியை எட்டி விட்டது. 2015 க்குள் பட்டினியை போக்க போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகி விடும். பட்டினியை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக நாம் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படும் போது விளைவுகள் எதிர் மறையாக இருக்கின்றன.

கடந்த 1980ம் ஆண்டில் ஏழை நாடுகளுக்கு விவசாயத்திற்கு, பல நாடுகளிலிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் 17 சதவீதமாக இருந்தது. ஆனால், 2006ம் வருடத்தில் இது 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், விவசாய உற்பத்தியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இந்த உதவிகள் சற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள 20 நாடுகள் உட்பட உலகில் 30 நாடுகளுக்கு பட்டினியை போக்க உடனடி உணவு தேவை உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தான் அதிகமானோர் பசியால் வாடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது (தினமலர், 23/10/2009).

——————————————————-
இந்த செய்திக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. ஆனாலும், மன உறுத்தத்தால் முதலாளித்துவ அறிவுஜீவிகளிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்.

– முதலாளித்துவம் தான் இறுதியான, சரியான முறை என்றால் ஏன் உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது?

கட்டணக்கொள்ளை கொடுமையால் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்…

சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் (தினமலர், 4/10/2009).

இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:

… சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கின்றன. …

இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது:

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம். எத்தனை பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்குகின்றனரோ, அதே எண்ணிக்கைக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம்….(தினமலர், 4/10/2009).

———————————————————————————

////சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும்,…////

கட்டணக்கொள்ளை நடப்பது தெரிந்தே நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எதற்காக அந்த பதவியில் நீடிக்க வேண்டும்?

தனக்கும் அந்த கொள்ளையில் பங்கு உண்டு என்று தானே அர்த்தம்?

இந்த கட்டணக்கொள்ளை, தற்கொலைகளை அரசும் சேர்ந்து தானே நடத்துகின்றது? இல்லை என்றால், தற்கொலையை தடுக்க அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

//ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம்….//


மாணவர்களே!

கல்வி என்பது ஏதோ முதலாளி பிச்சை போட்டு பெறுவது அல்ல. கல்வி நமது அடிப்படை உரிமை.

 

தற்கொலை தீர்வல்ல, கட்டணக் கொள்ளையை தடுக்க…

விடை வேறெதும் இல்லை!

தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!


பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள். “காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”.

அப்போது, நான் Y2K பிரச்சனையால் வேலை போகிறது என்று நினைத்தேன். சரி, இனிமேல் அந்த Y2K பிரச்சினை தான் வராதே என்று நினைத்து சந்தோசப்பட்டேன். அன்று, எனது நண்பர்கள் அனைவரும் திருமணம் ஆகாதவர்கள். ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை.

ஆனால் எனது சந்தோசம் அதிக நாள் நீடிக்கவில்லை. மீண்டும், 2008-ல் பொருளாதார வீழ்ச்சி வந்த போது எனது சமுதாய புரிதல் அனைத்தும் சுக்கு நூறாகி வெடித்தது. ஏனென்றால், இனிமேல் பணி நீக்கம் என்பதே வராது என்று நம்பிகொண்டிருந்த எனக்கு அடிமேல் அடி விழுந்தது. ஒன்று ஐ. டி. வேலை பணி நீக்கம், மற்றொன்று எனது நண்பர்களின் குடும்பம். 2000-தில் அவர்களுக்கு குடும்பம் இல்லை. ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால், இப்போது அவர்களை நம்பி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டு கடன், வண்டி/கார் கடன், போன்றவற்றால் அவர்களின் பணி நீக்கம் என்பது எவ்வளவு கொடுமை என்று உணர்ந்தேன்.

இப்போது புரிகிறது, பொருளாதார வீழ்ச்சி என்பது நிரந்தரம் என்று. அவ்வப்போது ஏதாவது காரணம் சொல்லி மறைத்து விடுகிறார்கள். ஏன் இந்த மூடு மந்திரம்?

தற்போது செய்திதாள்களில் வரும் சில செய்திகளை பார்த்தால் பொருளாதார வீழ்ச்சியின் கொடூரமுகம் தெரியும் என்பதால், கீழே சில செய்திகளின் தலைப்பை மட்டும் கொடுத்துள்ளேன்.

வேலை பறிபோகும் அபாயத்தில் ஐடி ஊழியர்கள் – மனநல மருத்துவரிடம் படையெடுப்பு (தினகரன், 28/06/2009)

பொருளாதார வீழ்ச்சியின் விளைவு – மாரடைப்பு மற்றும் தற்கொலைகள் (டைம்ஸ் ஆப் இந்தியா, 10/07/2009)

10,000 பேர் சத்தியம் கம்பெனியில் வேலை நீக்கம் – அரசு கைவிரிப்பு (டைம்ஸ் ஆப் இந்தியா)

வாடகைத் தாய் ஆகும் ஐடி பெண்கள் (ஜூனியர் விகடன்)

இது தான் பொருளாதார வீழ்ச்சியின் உண்மை முகம். இந்த பொருளாதார வீழ்ச்சி என்ற கொடும் நோயை போக்கும் மருந்து என்ன? ஏன் இந்த பொருளாதார வீழ்ச்சி வருகிறது?

உற்பத்தி என்பது இலாபத்திற்காக மட்டும் என்று இருக்கும் வரை இந்த நோயை தீர்க்க முடியாது. நிறைய குடும்பங்களும் தெருவுக்கு வருவதை தடுக்க முடியாது.

-நந்தன்

முதலாளிகள் நலம் பெற 3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள், ஆனால் பள்ளி கல்விக்கோ வெறும் 29,000 கோடிகள் மட்டும்?

3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள்:

அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கான புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.50 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் 70 சதவீத பணிகளை அரசு – தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு, மத்திய கட்டமைப்பு குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர்.

கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன், இந்த குழுவினர் விரிவான பேச்சு நடத்தி திரும்பியுள்ளனர் (தினமலர், 13/09/2009).

———————————————————————————————–

உடனே அறிவுஜீவிகள் கேட்கலாம், நாட்டின் உள்கட்டமைப்பு, நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேறும் என்று. ஆம், அது சரி தான். ஆனால், நாட்டின் மக்களுக்கு கல்வியே இல்லை என்றால், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அமைக்கப்படும் புதிய சாலைகளால் பயன் பெற போவது யார்?

நாட்டின் வருங்கால சமுதாயமாகிய குழந்தைகளின் கல்விக்கு அரசு செலவிடுவதோ வெறும் 29,000 கோடிகள் (http://indiabudget.nic.in/ub2009-10/eb/stat02.pdf). இது தான் நியதியோ?

இப்படி மாபெரும் கடன் வாங்கி அமைக்கப்படும் சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளா? அல்லது அறிவுஜீவிகள் பயன்படுத்தும் சாலைகளா? இல்லவே இல்லை, இந்த சாலைகளெல்லாம், முதலாளிகளின் தொழில் மிகசிறப்பாக நடைபெறத்தான்.

எடுத்துக்கட்டாக, தங்க நாற்கார சாலைகளை (டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னையை இணைப்பவை) நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது முதலாளிகள் பயன்படுத்துகிறார்களா?

மகாரஷ்டிராவில் 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை

மகாரஷ்டிராவில் ஓட்டு பொறுக்கிகள் மும்மரமாக ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த வருடம், இதுவரை மகாரஷ்டிராவில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 638 (டைம்ஸ் ஆப் இந்தியா, 6/09/2009).

விவசாயிகள், கொத்து கொத்தாக தற்கொலை செய்கின்றனர் என்றால், அது தான் கொடும் பஞ்சத்தின் முதல் அறிகுறி. அது ஓட்டுமொத்த சமூகமும் உணவின்றி வாடப்போவதற்கான எச்சரிக்கை.