• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,650 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் – பத்திரிக்கை செய்திகளின் உண்மை முகம்

காஷ்மீர் மக்கள், தனது உரிமைக்காக போராடுவதை எவ்வாறு பத்திரிக்கைகள் மறைக்கின்றன என்பதையும், எவ்வாறு அம்மக்களின் மனித உரிமையை இந்திய இராணுவம் மீறுகின்றது என்பதை டெல்லியில் உள்ள காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தோடு தொடர்புடைய உமா சக்ரவர்த்தி அம்பலப்படுத்துகிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 14/09/2009).

– பத்திரிக்கைகள் உண்மையான செய்தியை முழுமையாக தருவதில்லை. அவை, சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகின்றன. இவை, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை, காஷ்மீர் பிரச்சனை அம்மக்கள் தேர்தலில் வாக்களித்ததால் முடிந்துவிட்டது என்று நம்பச் செய்வதாகவே உள்ளது.

– எந்த பத்திரிக்கையும் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரம், கற்பழிப்பு, சிறையில் நடக்கும் கொட்டடி கொலைகள், இராணுவ மற்றும் ஆயுதப்படையின் ஆள் (உரிமைக்காக போராடுபவரை) கடத்தல் போன்றவற்றை பற்றி பேசுவதே இல்லை.

ஆக மொத்தம், இந்திய பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகத்தையே செய்கின்றன. அதை தேச பக்தி என்ற புதைசேற்றில் அடைத்துவிடுகின்றன.

மும்பையில் 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலம்….

ஐ நா மற்றும் மனிதவள வளர்ச்சி அறிக்கை சொல்லும் செய்தியை கேட்டால், இதைவிட வேறு எந்த அவலமும் இல்லை என்றே சொல்லலாம் (டைம்ஸ் ஆப் இந்தியா, 02/09/2009).

மும்பையில் சொகுசு பங்களாக்கள் 10 கோடி இருந்து 25 கோடி வரை விற்கப்படுகின்றன.

ஆனால், 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலமும் இதே மும்பையில் தான் நடக்கிறது.

மேலும், 10% மக்களின் வருமானமோ ரூபாய் 600 க்கும் குறைவு!

இது தான் சமூக நியதியா?

இந்த 54% மக்கள் இல்லாமல் மும்பை இயங்கிவிடுமா?

இது தான் முதலாளித்துவத்தின் சாதனையோ?

ஐ. டி. அறிவுஜீவிகளே, நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?

ஒரு மனிதன் உண்மையிலேயே சுகபோக வாழ்க்கை வாழ்கிறான் என்றால் தன்னுடைய வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவேண்டும். அப்படி இல்லையென்றால், அது அடிமை வாழ்க்கை தான்.அந்த முக்கிய நிகழ்ச்சியில் தான், மகபேறு காலமும் அடங்கும்.

ஐ. டி. அறிவுஜீவிகளே உங்கள் கம்பெனி எத்தனை நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகபேறு விடுமுறையாக குடுக்கிறது? ஐ. டி. யில் வேலை செய்யும் பெண்கள், சம்பளத்துடன் 6 மாதம் விடுமுறை எடுக்க முடியுமா? குறைந்த பட்சம், சம்பளம் இல்லாமல் 7 மாதம் விடுமுறை எடுக்க முடியமா?

இதோ மத்திய அரசின் விடுமுறை விபரம்:

மகபேறு காலத்தின் போது ஆணுக்கு 15 நாட்களும், பெண்ணூக்கு 180 நாட்களும் விடுமுறையாக கொடுக்கயிருக்கிறது. தற்போது இது 135 நாட்களாக உள்ளது. (டைம்ஸ் ஆப் இந்தியா, 25/07/2009)

தனியார்மையம் தான் சரி என்று சொல்லும் ஐ. டி. அறிவுஜீவிகளே, இப்போது சொல்லுங்கள் நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?

மக்கள் தொகையில் 40% ஆக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே….

ஒரு நாட்டின் எதிர்காலம், இளைய தலைமுறையால் நிர்ணிக்கப்படுகிறது. சரி, மக்கள் தொகையில் 40% ஆக உள்ள 18 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே. இந்த பிச்சை காசு எதற்கு உதவும்?

தேசிய குழந்தைகள் நலயுரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை (டைம்ஸ் ஆப் இந்தியா, 30/06/2009):

குழந்தைகள் குறைந்தபட்ச சுகாதார வசதியோ, கல்வி அறிவோ பெறவில்லை. இதனால், சத்து பற்றாக்குறை நோய், கல்வியறிவின்மை, குழந்தை தொழிலாளர்கள், போன்ற கொடுமைகள் நாட்டில் உள்ள 80% குழந்தைகளை பாதிக்கிறது.

80% குழந்தைகள் உடல் நலக்குறைவாக உள்ளனர். 45% குழந்தைகள் உடல் போதிய உணவில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிறந்த குழந்தைகளில் 1000-க்கு 67 குழந்தைகள் இறந்துவிடுகின்றனர் (இது பங்களாதேஷ்யில் 1000-க்கு 46 மட்டுமே).

18 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, உணவு, கல்வி, பாதுகாப்பு போன்றவைகள் மறுக்கப்படுகிறது.

முதலாளிதுவ அறிவுஜீவிகளே பதில் சொல்லுங்கள்…

பொருளாதார வளர்ச்சி என்பது, நாட்டில் உள்ள 40% குழந்தைகளுடன் சம்மந்த பட்டதா அல்லது இல்லையா?

பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் உள்ள அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பதற்க்காக, நாட்டின் பொருளாதாரத்தை தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக தான் திட்டமிடப்பட வேண்டுமா?

பொருளாதார வளர்ச்சி வீதம் என்பது பச்சிழம் குழந்தைகளின் இரத்தத்தின் மீதும், சதையின் மீதும் தான் வளர வேண்டுமா?


இதோ வந்துவிட்டது, குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்விக்கான சட்ட மசோதா என்ற கபட நாடகம்…

கல்வி என்பது அடிப்படை உரிமை. எப்படி மின்சார கட்டணம் கட்டவில்லை என்றால் உடனடியாக மின்சார இணைப்பை துண்டிப்பது அரசின் கடமையாக நடைமுறைபடுத்தி வருகிறதோ, கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால், தன்னுடைய கடமையை மட்டும் கண்டிப்பாக செய்யும். மக்களின் அடிப்படை உரிமை என்பது அரசுக்கு புரியாத சொற்றொடர்.

இந்தியா போலி சுதந்திரம் அடைந்து 60 வருடங்களுக்கு மேலாகியும், குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்விக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவில்லை. இந்த சட்ட மசோதா, கடந்த ஏழு வருடங்களாக ராஜ்யா சபாவில் நிலுவையில் இருந்தது. ஓட்டுப் பொறுக்கிகள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளில், இலவச கல்வியும் கட்டாயமாக இடம் பெறும்.

ஆனால், ஏன் இந்த சட்ட மசோதா கடந்த ஏழு வருடங்களாக ராஜ்யா சபாவில் நிலுவையில் இருந்தது?

ஏன் கடந்த 60 வருடங்களாக குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்விக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவில்லை?

வெறும் 54 எம்.பி. க்கள் முன்னிலையில் நிறைவேறிய இலவச கல்விக்கான சட்ட மசோதா:

இந்த வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த மசோதா ராஜ்யா சபாவில் நிறைவேறும் போது, எத்தனை எம்.பி. க்கள் இருந்திருக்க வேண்டும்? ஓட்டுப் பொறுக்கிகள் அடிக்கும் வாய் சவடால்கள் படி பார்த்தால், அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 54 எம்.பி. க்கள் முன்னிலையில் இலவச கல்விக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது (டைம்ஸ் ஆப் இந்தியா, 2/07/2009). இப்பொது புரியும், இந்த சட்ட மசோதா என்பது வெறும் காகிதத்தில் இருக்க போகும் சவடால் என்பது.

ஏற்கனவே உள்ள அரசுப் பள்ளிகளையும், அரசு ஜோராக இழுத்து மூடிவருகிறது. இதில், இந்த சட்ட மசோதா நடைமுறையில் நிறைவேறும் என்பது கானல் நீரே.

தீர்வுதான் என்ன?

விடை வேறெதும் இல்லை! அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை நடைமுறையில் சாதிப்போம்!