கடந்த 25 ந்தேதி மதுரவாயலைச் சார்ந்த எமது அமைப்புத் தோழர்கள் திவாகர்,குமரேசன் ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்துமறைத்து வைத்து போலீசார்சித்திரவதை செய்தனர். தகவல் தெரிந்ததும் இதுபற்றி விசாரிக்க பதறியடித்துக் கொண்டுமதுரவாயல் போலீசு நிலையம் சென்ற அப்பகுதி மக்கள்,புமாஇமு தோழர்களை ஏ.சி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலை வெறியுடன்தாக்கினர். இதில் பெண்கள் உள்பட பலர்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 64 பேர் மீது பொய்வழக்குகள்போட்டு கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பிணையில்விடவும் மறுத்து அராஜகம் செய்துவருகின்றனர்.
போலீசின் தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புத் தோழர்கள் இருவர் சீரியசான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம்பார்த்து வருகின்றனர். போலீசின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்து ,இன்று 4.9.12 காலை 11 மணிக்கு மெமோரியல்ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.மா.இ.மு மாநிலஅமைப்புக்குழுஉறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார்.இதில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய பதிவுகள்:
பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!
நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!
Filed under: போராட்ட செய்திகள் | Tagged: இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத், ஏ.சி சீனிவாசன், கண்டன ஆர்ப்பாட்டம், காக்கிசட்டை ரவுடிகள், கொலைவெறி, சுவரொட்டி, செய்திகள், நக்கீரன் வார இதழ், பத்திரிக்கை செய்தி, பாசிச ஜெயா, புமாஇமு தோழர்கள், பொய் வழக்கு, போலீசு அராஜகம், போலீசு ஆட்சி, மதுரவாயல், முற்றுகை |
Leave a Reply