• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!


போஸ்டர்

சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கொலையாளிகளை கைது செய்யாமல் அப்பாவி இளைஞர்களை கைது செய்த போலீசை தட்டிக்கேட்ட பு.மா.இ.மு தோழர்கள்  திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு !

விசாரிக்க சென்ற பகுதி மக்கள்,  பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு !

இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம் !”

இவை தான் சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். பு.மா.இ.மு தோழர்கள் நரேஷ், பால்சாமி, வினோத் ஆகியோர் நேற்று காலை மதுரவாயலிலிருந்து MMDA காலனி நோக்கி இந்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்ற பொழுது போலீசு குண்டர்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்தது மதுரவாயல் போலீசு, ஆனால் தோழர்களை அடைத்து வைத்திருந்ததோ கோயம்பேடு ஸ்டேஷனில்.

கைது செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக களத்திற்கு வந்த ம.உ.பா.மை தோழர்கள் உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசினர்.

அவரு சாமி பட ஹீரோ மாதிரி “எதுக்குப்பா போலீசோட பிரச்சினை, விடு போலீஸ்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்காத. எதுக்கு இருபது வயசு, இருபத்தியோரு வயசு பசங்களை எல்லாம் தேவை இல்லாம சேர்த்து வச்சிக்கிட்டு பண்றாங்க” என்றார். அதுக்கு ம.உ.பா.மை தோழர்கள்,” சார் அது அவங்க கொள்கை அதைப் பத்தி நீங்களும் நானும் பேச முடியாது. அவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. அவங்க மேல பொய் வழக்கு போட்ருக்கீங்க, தடியடி நடத்தி இருக்கீங்க அதை கண்டிச்சு அவங்க போஸ்ட்டர் போட்ருக்காங்க. அது அவங்களோட கருத்துரிமை. அதுக்காக எப்படி அவங்களை கைது செய்யலாம்? முதலில் எஸ்.ஐ-யை அடித்ததாக வழக்கு போடுறீங்க, அப்புறம் காலையில ஐந்தரை மணிக்கு ராப்பரி பண்றதாக வழக்கு போடுறீங்க. இது எப்படி?” என்று கேட்டனர்.

பிறகு ஏ.சி இன்ஸ்பெக்டரிடம் கைமாற்றி விட்டார். இன்ஸ்பெக்டர் ஹீரோவோ மூன்று பேரின் பெற்றோர்களும் வந்தால் தான் விடுவேன் என்றார். வந்தார்கள். “அவர்களிடம் எதுக்கு உங்க பையன இந்த மாதிரி அமைப்புகளுக்கெல்லாம் அனுப்புறீங்க, இது என்ன மாதிரி அமைப்புன்னு தெரியுமா உங்களுக்கு ? நக்சலைட் அமைப்பு” என்று பீதியூட்டிவிட்டு பிறகு வழக்கு பதிந்துகொண்டு சொந்த ஜாமீனில் விட்டார். அனுப்பும் போது தோழர்களுடைய வண்டியையும் செல்போன்களையும் தர முடியாது என்றார். இறுதியில் போராடி வண்டி மட்டும் பெறப்பட்டது. செல்போன்கள் வழக்கு ஆதாரங்களுக்கு வேண்டும் என்று தர மறுத்துவிட்டனர்.

பிறகு மூன்று தோழர்களையும் அழைத்து எதுக்கு இந்த சின்ன வயசுலயே இந்த வேலை, இந்த மாதிரி ஆளுங்களோட சேர்ந்தா உங்க வாழ்க்கையே அழிஞ்சிரும் என்றெல்லாம் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.  போலீசு ரவுடிகள் தமக்கு கூறும் புத்திமதிகளை தோழர்கள் மதிக்கமாட்டார்கள். ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் மாணவர்கள் அடுத்தக்கட்ட அமைப்பு வேலைகளை பார்க்கத் துவங்கிவிட்டனர்.

சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?

மாணவர்கள் தறுதலையாக சுற்றி வந்தால் பிரச்சினை இல்லை. அரசியல் உணர்வுடன் போராட ஆரம்பித்தால் தடியடி, சிறை, கைது, புத்திமதி எல்லாம் வந்துவிடுகின்றன.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழக காவல்துறைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. பு.மா.இ.மு வா – பாசிச ஜெயாவின் வளர்ப்பு பிராணிகளா என்பதை போராட்டக் களத்தில் பார்ப்போம்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: