ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.
இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.
வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை
விலை ரூ 30
குறுந்தகடு கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367
தொடர்புடைய பதிவுகள்:
இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !
தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!
கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!
சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!
Filed under: கல்வி தனியார்மய ஒழிப்பு, வெளியீடுகள் | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசியல், இலவசக் கல்வி, ஒளிக்குறுந்தகடு, கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கல்வி தனியார்மயம், கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு, சமச்சீர் கல்வி, தனியார் பள்ளிகள், நிகழ்வுகள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், RSYF |
Leave a Reply