தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த கல்விதுறையே தனியார்மயமாக்கப்படுகிறது. கல்வித்துறையை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிக்கு லாபம் ஈட்டும் வகையில் பாராளுமன்றத்தில் 5 வகையான சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கபில்சிபில் தாக்கல் செய்துள்ளார்.
1. உயர்கல்வி மற்றும் ஆய்வுத்துறை மசோதா-2011
2. உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகார ஒழுங்குமுறை ஆணைய மசோதா-2011
3. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் நுழைவு மற்றும் செயல்பாடுகளின் வரைவு மசோதா-2010
4. தேசிய சட்டக்கல்லூரி மசோதா-2010
5. கல்வி தீர்ப்பாயங்கள் மசோதா-2011
இவ்வகை சட்டங்கள் மூலம் உயர்கல்வி மற்றும் ஆய்வுத்துறைகளை வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றப்படுகிறது. இம்மசோதாவின் படி, பல்கலைகழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழிற்கல்விக்கான மசோதா (NCDE), ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுமம் ஆகியவை கலைக்கப்படும். வெளிநாட்டு சட்டக் குழுமங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி துவங்கவும் அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வழக்கறிஞர்களை உருவாக்கவும், அதற்கேற்றார்போல நீதி பரிபானை முறையில் மாற்றம் செய்யவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் , மசோதாவை ரத்து செய்ய கோரியும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி -திருச்சி சட்டக்கல்லூரி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புமாஇமு கிளை செயலாளார் கி.ஜெகதீசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டதில் சாருவாகன்(இணை செயலர்) விளக்கவுரை ஆற்றினார். இறுதியில் கஜேந்திரன் (பொருளாளர்) நன்றியுரையுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ-மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன முழங்கமிட்டனர்.
தகவல் -புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-திருச்சி
தொடர்புடைய பதிவுகள்:
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி!
தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
திருச்சி – கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு குறித்த பிரச்சார பேனர்!
கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!
கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு! அனைவரும் அணிதிரண்டு வாரீர்!
July 2012, Conference against privatization of education! மாநாட்டு பிரசுரம் ஆங்கிலத்தில்
திருச்சி – கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு குறித்த பிரச்சார பேனர்!
Filed under: ஆர்ப்பாட்டம், கல்வி தனியார்மயம் |
Leave a Reply