திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் நேற்று (22.12.11) காலை முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். இப்போராட்ட களம் திருச்சி ஜங்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு காலை முதல் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தோழர்கள் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர் வண்டி நிலையத்தில் மறியல் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர். அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். தோழர்கள் மறைந்து மறைந்து இருக்க, தோழர்களை போலீஸ் தேடி தேடி சுற்றி வந்தனர்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்பு தோழர்கள் மறைந்து இருப்பதை போலீஸ் மோப்பம் பிடித்து போலீஸ் உதவி கமிசனர மற்றும் அதிரடி பாதுகாப்பு படை என குவிக்க பட்டது. தோழர்களோடு செய்தியாளர்களும் மறைந்து இருந்தனர்.
இந்த செய்தி அறிந்த போலீஸ் குருவாயூர் எக்ஸ்பிரசை திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர்வண்டி நிலையத்துக்கு முன்பு வுள்ள நிலையத்தில் நிறுத்தி விட்டனர். வண்டி வரவுக்காக காத்து இருந்த தோழர்கள் வெகு நேரம் ஆகியும் வண்டி வராததால் வெளி வந்து தண்டவாளத்தில் மறியல் செய்ய ஓடினர். அப்போது போலீஸ் படை தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.
தோழர்கள் சோறு கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் மறுக்கும் கேரள அரசை கண்டிகின்றோம்! கேரளா முதல்வர் உம்மன் சண்டியை சிறையில் அடைத்திடு!
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, சி. பி. ஐ. எம். போன்ற கட்சிகளை மக்கள் புறகணிக்க வேண்டும். தமிழக மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று முழக்கம் இட்டனர். எட்டு தோழர்களை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தகவல்:
மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி.
தொடர்புடைய பதிவுகள்:
முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!
Filed under: முல்லைப் பெரியாறு | Tagged: அச்சுதானந்தன், அரசியல், உச்சநீதிமன்றம், உம்மன் சாண்டி, கண்டன ஆர்ப்பாட்டம், காங்கிரசு, கேரள அரசு, சி.பி.எம்., தமிழக கேரள எல்லையில் பதட்டம், தமிழினவாதிகள், நிகழ்வுகள், பா.ஜ.க, பாரதிய ஜனதா, பெ.வி.மு, பேபி அணை, போலிக் கம்யூனிஸ்டுகள், ம.உ.பா.மை, மத்திய அரசு, மார்க்சிஸ்டுகள், முல்லைப் பெரியாறு அணை, ரயில் மறியல் |
Leave a Reply