தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக, சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.
இப்படிபட்ட ஏகாதிபத்திய கைக்கூலியான அண்ணா ஹசாரே நேற்று (18.12.11) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை புமாஇமு தோழர்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்ததோடு 13 தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து உள்ளது போலீஸ்.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!
- ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்
இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமே!
இளைஞர்களே!
- ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது
வலுவான லோக்பாலுக்கும் அல்ல –
- முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!
- பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான
ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!
தொடர்புடைய பதிவுகள்:
அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!
அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
Filed under: கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி | Tagged: அண்ணா ஹாசாரே, அம்பானி, அரசியல், ஆர்ப்பாட்டம், இந்தியா, கருப்புக்கொடி, காங்கிரஸ், காந்தி, தனியார்மயம், தமிழகம், துரோகம், நிகழ்வுகள், நிலப்பண்ணை, பன்னாட்டு முதலாளிகள், பிர்லா, பொய் வழக்கு, மறுகாலனியாக்கம், லோக்பால், ஸ்பெக்ட்ரம் |
அன்னாவுக்கு எதிரான கருத்தை பதிவு செய்ய நினைத்திருந்தால் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கி, உண்ணாவிரத அரங்கினுள் ஏசி போட்டு, மூன்று நான்கு மிக்சி வாங்கி வைத்துக்கொண்டு, ஒரு லோடு ஆப்பிள் ஒரு லோடு ஆரஞ்சு பழங்களை விடாமல் சூசு போட்டு குடித்துக்கொண்டே உண்ணாவிரதம் இருந்தீர்களென்றால் அகில இந்தியவே திரும்பி பார்த்து அன்னவின் உண்ணாவிரத காமெடியின் உண்மை நிலையை உணர்ந்திருக்கும்.