ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோன்மையை வீழ்த்தி, இந்த உலகைப் படைத்த பாட்டாளிகளால், உலகினை ஆளமுடியும் என்று பறைசாற்றி நாள் 1917, நவ.7. மார்க்சிய ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும் காட்டிய பாதையில் தோழர் லெனின் தலைமையில் அடிமைவிலங்கு பூட்டப்பட்டிருந்த தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைந்த நாளும் இதுதான்,உழைக்கும் மக்களை வறுமையிலும் ஏழ்மையிலும் திட்மிட்டுத்தள்ளி, உலகையே சுரண்டிக் கொழுத்த முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கத்தால் வீழ்த்தப்படவேண்டியதை அறிவித்த நாள் தான் நவ.7. அந்த உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவை “நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்” என்ற முழக்கத்தின் படி, புதிய ஜனநாயகப்புரட்சியை நடத்தி முடிப்பதற்கான விழாவாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை சரியாக 3.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தியாகிகளுக்கு வீரவணக்கப்பாடலோடு தொடங்கின. தலைமையுரையாற்றிய பு.மா.இ.மு சென்னைக்கிளைச்செயலாளர் தோழர் வ. கார்த்திகேயன் “சோசலிச ரசியா உழைக்கும் மக்களுக்கான சொர்க்க பூமியாக இருந்ததையும், தன் லட்சக்கணக்கான மக்களை இழந்து பாசிச கொடுங்கோன்மையிலிருந்து இந்த உலகைக் காத்து உலகிற்கு வழிகாட்டியது. இந்தியாவில் உள்ளா மறுகாலனியாக்கத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வேரறுக்க நவ. புரட்சி நாளை நெஞ்சில் ஏந்த வேண்டும் என்றும், குறிப்பாக தமிழகத்தில் நூலகங்களை இடம் மாற்றுவது என்ற பெயரில் வரலாறுகளை அழிக்கும் பார்ப்பன பாசிச ஜெயாவிற்கு எதிராக போராடி வெல்ல வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்”
மொத்த நிகழ்ச்சிகளையும் பு.மா.இ.மு வின் பெண் தோழர்கள் இருவர் தொகுத்து வழங்கினார்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தற்போது உள்ள சீரழிப்பட்டுள்ள, உரிமைகள் இழந்து நிற்கும் சமுதாய அமைப்பை எள்ளி நகையாடிய படியும் அறிமுகம் செய்தார்கள். “நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்” என்ற பெயரில் ம.க.இ.க பெண் தோழர்கள் எழுதி இசையமைத்திருந்தனர். வீடுகளில் நடக்கும் ஆணாதிக்கக்கொடுமைகளை அம்பலப்படுத்க்டும் விதமாக பெவிமு தோழர்கள் “பொண்ணாப்பொறந்த ” என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அடுத்தபடியாக, ம க இ க இளந்தோழர்களின் மாறுவேட நிகழ்ச்சிய் தந்தை பெரியர், ஜான்சி ராணி, அச்ரத் மகல், பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன், பழங்குடியின வீரர்களை அறிமுகம் செய்தது. அந்த இளந்தோழர்களின் உணர்வு மிக்க வசனங்களும் குறிப்பாக பகத் ச்ங்காக வேடமிட்ட ஒரு இளம் தோழரின் கம்பீரமும் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற வார்த்தைகளும் பார்வையாளர்களாஇ உணார்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
பார்ப்பனீய பாசிசம், மறுகாலனிய பயங்கரவாதத்திற்கு எதிராக புமாஇமு வின் பள்ளிகிளைத்தோழர்களின் “மறு காலனியாக்கச்சதியை முறியடிப்போம்”தப்பாட்டம், மேலவளவு, திண்ணியம் எனத்தொடரும் ஆதிக்க சாதிவெறியாட்டத்தை அம்பலப்படுத்தியபெவிமுவின் “வெட்டுபட்டு செத்தோமடா” என்ற பாடலும் நேபாள மக்களின் போராட்டங்களை, எழுச்சியினை கண்முன் நிறுத்திய “இமயத்தின் சிகரத்திலே” என்ற பாடலும், மாவீரன் திப்புசுல்தானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் “ஒப்பற்ற மாவீரன் ” என்ற பாடலும் ” கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்” என்ற பாடலும் போராட்டக்களத்திற்கு நம்மை அழைத்துச்சென்றன என்றால் அது மிகையல்ல. பு.மா.இ.மு தோழர்கள் நான் உலகம் தொழிலாளி நானே உலகம் என்றா காட்சி விளக்கப்பாடல் தொழிலாளிகளின் உழைப்பையும், வீரத்தையும் அவர்கள் தான் உலகம் என்று அறிவித்து பார்வையாளர்களின் கண்ணீரை வரவழைத்தது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சக்தி சுரேஷ் “சமச்சீர் பொதுப்பாடத்திட்டம், தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு உள்ளேயும், மக்களிடையேயும் போராடியதன் விளைவே சமச்சீர் பொதுப்பாட்திட்டம் அமலுக்கு வந்தது” என உரையாற்றினார்.
ஆக்சல் இந்தியா, மேத்தா மருத்துவமனையின் முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக தொழிற்சங்கம் அமைத்து போராடி வெற்றி பெற்றதை அதன் அனுபவங்களை களப்போராளிகளான பு.ஜ.தொ.மு தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
“மறுகாலனியாக்கத்தை வீழ்த்த போஸ்விக் கம்யூனிஸ்டுகளாக களமிறங்குவோம்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்பாளார் தோழர் த. கணேசன் “ரசியப்புரட்சிக்குப்பின் சோவியத் அரசு மக்களுக்காக செயல்பட்டதைய்ம், சனநாயக அரசாக இருந்ததையும், உலகம் முழுவது ஏனைய பிற நாடுகளுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்ததையும் கூறினார். பின்னர் முதலாளித்துவ பாதையாளர்கள் முதலாளித்துவம் மீட்சியடைந்து “கம்யூனிசம் தோற்றுவிட்டது”” என கொக்கரித்தனர். அந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொடங்கிய வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் (80)எண்பது நாடுகளில் பற்றிப்பரவி வருவதையும், முதலாளித்து நாடுகளால் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்ட தொழிலாளிவர்க்கத்தின் ஒரு பகுதி இன்று முதலாளித்துவத்தின், நிதி மூலதனத்தின் கருவறையை ஆக்கிரமித்து , “பட்டினிக்கிடப்போரே! பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்” என் று முழங்குகினின்றனர்.
ஊலகம் முழுவதையும் ஏகாதிபத்திய, நிதிமூலதன சூறையாடல்களிலிருந்து காக்க கம்யூனிசம் மட்டும்தான் ஒரேதீர்வு. போல்ஸ்விக் பாணியிலான கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் புரட்சியை சாதித்துக்காட்டும், முதலாளித்துவத்தை கருவறுக்கும் என்றும் இந்தியாவில் மறுகாலனிக்கு எதிராக நக்சல்பாரிகளின் தலைமையில் ஒரு விடுதலைப்போரை கட்டியமைத்து புதிய ஜனநாயகப்புரட்சியை சாதிக்க உறுதியேற்போம்” என்று கூறினார்.
இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேச கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
புதிய மாணவர்கள் – இளைஞர்கள் , தொழிலாளிகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக் வருகைபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிரம்பி வழிந்தது, சென்னை புமாஇமு சார்பில் சோவியத் திரைப்படத் தொகுப்பு வரிசை1 என்ற டிவிடி வெளியிடப்பட்டு நூற்றுக்குமேல் உடனே விற்றது.மார்க்சிய ஆசான்கள் மற்றும் பகத்சிங்கின் படங்கள் நூற்றுக்கணக்கில் விற்னையாகி பின்னர் உடனே மறுபதிப்பும் செய்யப்பட்டது.அதைப்போலவே கீழைக்காற்றின் புத்தகங்கள் மாணவ இளைஞர்களாலும் தொழிலாளிகளாலும் விரும்பி வாங்கப்பட்டு விற்றுத்தீர்ந்தன.
நவம்பர் 7 புரட்சி நாள் உழைக்கும் மக்களின் திருவிழா என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவும் நக்சல்பாரி அமைப்புக்களே புரட்சியை சாதிக்குமென்ற நம்பிக்கையை விதைக்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது”
-புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,சென்னை
புகைப்படங்களை காண பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:
புகைப்படத் தொகுப்பு
Filed under: நவம்பர் புரட்சி நாள் | Tagged: அக்டோபர், உழைப்பாளிகள் தினம், ஒளிக்குறுந்தகடு, சோவியத், பாட்டாளி வர்க்கம், பூவுலகில் சொர்க்கம், மக்கள்புரட்சி, ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், ஸ்டாலின் |
உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும்
புரட்சிநாள் கொண்டாடப்பட்டதையும்
காண மகிழ்ச்சியாக இருந்தது.
இங்கு ஒரு பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றது.
தொடுப்பிற்கு
http://suvaithacinema.blogspot.com/2011/11/blog-post_12.html