தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குரேஷி கூறியது: நமது நாட்டின் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதனால், வெற்றி பெற்ற பிரதிநிதிகளை “பதவியிலிருந்து நீக்கும் உரிமையை’ மக்களுக்கு வழங்குவது சாத்தியமில்லை. இந்த உரிமை வழங்கப்பட்டால் எல்லோரும் தங்களது பிரதிநிதிகளை அடுத்தடுத்துப் பதவி நீக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.
திரும்ப பெறும் உரிமையை அளித்தால் அனைவரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்றால் உனது ஜனநாயகத்தோட யோக்கியதை என்ன? திருடர்கள் மட்டுமே நிற்க முடியும் என்ற ஜனநாயகத்தை மக்கள் ஏற்க வேண்டுமா?
”வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்குவதும் ஆபத்தானது. அப்படிப்பட்ட உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதுவும் நாட்டுக்கு எதிரான மனநிலை அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தவறான செய்தியைப் பரப்புவதற்கு வழி ஏற்பட்டுவிடும். ”
ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த உழைக்கும் மக்க்ள் நாங்கள் இந்திய நாட்டினரே அல்ல, எங்கள் மீது தொடுக்கப்பட்டு இருப்பது ஆக்கிரமிப்பு போர், எங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று நாள் தோறும் போராடுகிறார்கள். இந்த மக்களின் கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்து கொள்ள முடியாது என்றால் இது என்ன பரிசுத்த ஜனநாயகம்.
”உழைக்கும் மக்களின் உயிர் வாழும் உரிமையே நிராகரிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது.”
’நல்லவனாக பார்த்து தேர்தெடுங்கள்’ என பத்திரிக்கைகள் ஜாக்கி வைத்து தூக்குகின்றனர்(எந்த கிரகத்தில் என்று மட்டும் சொல்வதில்லை). இந்த நல்லவனை தேர்தெடுக்கும் பிரச்சாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியிடமே முதலில் செய்யலாமே.
Filed under: குறுக்கு வெட்டு பகுதி | Tagged: அரசியல், இந்தியா, உள்ளாட்சி தேர்தல், ஓட்டுப்பொறுக்கி அரசியல், செய்தி விமர்சனம், தேர்தல், நிகழ்வுகள், போலி ஜனநாயகம் |
Leave a Reply