• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,339 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிக்கை உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!

”உங்களுக்கு ஏற்கெனவே போதுமான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. மேலும், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று ஒரு அநீதியை நீதியாக வழங்கியுள்ளது உச்ச(அ)நீதிமன்றம்.

இதை ஆதரித்து பார்ப்பன தினமணி  இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறது.

  விபத்து வியாபாரமாகக் கூடாது!

 ”ஏற்கெனவே போதுமான இழப்பீடு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்பதைப் புரிந்துகொள்ள…. பாதிக்கப்பட்டோர் சங்கம், தமிழ்நாட்டில் எரியும் கூரை உள்ள பள்ளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். விபத்துக் காலத்தில் விரைந்து வெளியேற அகன்ற வாயில், மாடிப்படிகள் இல்லாத பள்ளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் அகால மரணங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கண்காணிப்பு அமைப்பாகத் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இவர்கள் உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையிலும் தங்கள் குழந்தையைப் பார்த்திருப்பார்கள். ” என்று நடு நிலையாக ஒரு கருத்தை சொல்வதுபோல் ஏழைகள் மீது தனது வக்கிரத்தை கக்கியுள்ளது.

 கும்பகோணம் பள்ளியில் நடந்த படுகொலையை யாரும் மறந்து விட மாட்டோம். ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கூடுதல் இழப்பீடு தர முடியாது என்று கடந்த வாரம் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நாளிதழ்களில் செய்தி வந்ததை பார்த்து சிலர் ஏதேனும் யோசித்து இருப்பார்கள்.

 அப்படுகொலை குறித்த நினைவுகள், அன்று அரசு கொடுத்த பண்த்தால் தங்கள் குழந்தையை திரும்ப கிடைக்குமா? என குழந்தையை இழந்த பெற்றோர் பணத்தை வீசி எறிந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்முன் வந்து இருக்கும். இன்று தங்கள் தேவையை ஒட்டி ஒரு லட்சம் இழப்பீடு போதுமானதல்ல என்று கூடுதல் இழப்பீடு வழக்கு தொடுத்து உள்ளனர். எப்படி அப்படுகொலைக்கு காரணமான தனியார் முதலாளி தண்டிக்கபடவில்லையோ, அதுபோலவே அவர்கள் கோரிய இழப்பீடும் தர முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.

 கூடுதலாக உங்களுக்கு போதுமான இழப்பீடும் (ஒரு லட்சம்) , அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் கொடுத்துவிட்டோம் என்று உச்ச நீதிமன்றம்  வக்கிரமாக கூறுகிறது.

எது கூடுதல் இழப்பீடு? உன்னுடைய கல்வி தனியார்மய கொள்கையினால் படுகொலை செய்யபட்ட எமது குழந்தைகளுக்கு கேவலம் ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அதுவே போதுமானது என பேசுகிறாய்? அப்பல்லோ சிகிச்சை என்பது என்ன அவ்வளவு அமுதமா? கல்வியை போல, நீ  மருத்துவத்தை தனியார்மயமாக்கி தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்காக திறந்து விட்டுட்டு அதுல சிகிச்சை கொடுப்பதை பெருமையாக பேசுகிறான்.

 நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து தினமணி தலையங்கம் எழுதுகிறது விபத்து, வியாபாரமாக கூடாது! என்று.

 எது விபத்து? கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது.

 எது வியாபாரம்? எல்.கே.ஜி –க்கு இவ்வளவு யு.கே.ஜி-க்கு இவ்வளவு என போர்டு போட்டு விற்கும் உங்கள் தனியார் முதலாளிகள் செய்வது வியாபாரமா? இல்லை உயிரை இழந்த எமது குழந்தை-க்கு நியாயமான நிவாரணம் கேட்பது வியாபாரமா?

 பெற்றோர் பாதுகாப்பு சங்கம் என்ன செய்யனும் என லிஸ்ட் போடும் நீ, இந்த அரசு எப்போதும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக கல்வியை தனியார்மயமாக்கி கொள்ளைக்கு காவல் நிற்பதை ஏன் சாட மறுக்கிறாய்?

 தீர்ப்பும் அது குறித்து தினமணி தலையங்கமும் காட்டிவது இந்த நீதிமன்றமும், அரசும் நமக்கானது அல்ல, தனியார் முதலாளிகளுக்காக தான் என்பதைதான். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராகவும், தனியார்மய கொள்கைக்கு எதிராகவும் போராட போகிறோமா? அல்லது இதனை சகித்து கொண்டு தனியார்பள்ளி முதலாளிகளிடம் கை கட்டி  நிற்கப் போகிறோமா? என்பது தான் இப்போது நம்முன் உள்ள கேள்வி?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: