• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,079 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

அரசு, தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு

திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.÷கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ÷திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 புத்தகங்கள் தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

÷தமிழக அரசு, சென்ற ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புவரை சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

÷இந்நிலையில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தாண்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்தார்.

÷இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு கூறியது.

÷அதையேற்ற தமிழக அரசு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.

÷ஆனால் முழுமையான அளவுக்கு புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

÷ஆனால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

÷அதேபோல் ஒருசில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

 ÷மாணவர்களுக்கு புத்தகங்களும் முழுமையாக வழங்காத நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படாததால் தேர்வுக்கு எப்படி தயாராவது? எனப் புரியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.÷இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளகளில் புத்தகங்களின் தேவை அறிந்து சம்மந்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜி. யோகானந்தம்
நன்றி : தினமணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: