• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 180,093 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

“நாடு முன்னேறுதுங்கிறான்…” – புரட்சிகரப் பாடல்!

நாடு முன்னேறுதுங்கிறான் – அட
மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன் அமெரிக்கா
ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான்
(நாடு முன்னேறுதுங்கிறான்)

தாகம் தீர கொக்கோ கோலா
போதை ஏற ·பாரீன் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு
அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு

(நாடு முன்னேறுதுங்கிறான்)

டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு – டாக்டர்
தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு
வகை தெரியாம தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்
விளம்பரத்த பாத்தே நம்ப புள்ள ஏங்குது
சத்துணவு தீந்திடுன்னு தட்டோட ஓடுது – இவன்
தட்டுக்கெட்ட திட்டமெல்லாம் என்னா புடுங்குது

(நாடு முன்னேறுதுங்கிறான்)

காலைக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்கு போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம்
இதுக்கே போலிசு துணை ஒண்ணு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணும் – பெரிசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்

(நாடு முன்னேறுதுங்கிறான்)

பள்ளிக் கூடமுன்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சொவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்தில தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வெண்டு போகுது – நம்ப
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது

(நாடு முன்னேறுதுங்கிறான்)

அரசு மருத்துவ மனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேசனின்னு வச்சிருக்கான் பேரு
அறுத்து போட்டுபுட்டு இல்லேங்கிறான் நூலு
காசுக்காரக் கூட்டம் அப்போலோ போகுது – நமக்கு
கவருமெண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது

(நாடு முன்னேறுதுங்கிறான்)

ஏ.சி கூண்டுக்குள்ள மொம்மை வெரைக்குது – தங்க
ஊசிச் சேலை அதன் ஒடம்பில் மினுக்குது
நல்லி சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க
பட்டினிச் சாவில் உன் பட்டு மினுக்குது

(நாடு முன்னேறுதுங்கிறான்)

காடும் மரமும் கடல் மீனும் தனியாரு
ரோடு கரண்டு டெலி போனும் தனியாரு – அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிப்புட்டான்கூறு – அத
ஏலம் மூணுதரன்னு கூவுறான் சர்க்காரு – நம்ம
நாடுன்னு சொல்லிக்கிட மிச்சமென்ன கூறு – இவன்
ஆடுகிறான் ஆட்டுறவன் காட்டு தர்பாரு

(நாடு முன்னேறுதுங்கிறான்)

நன்றி : ம.க.இ.க வின் புரட்சிகரப் பாடல் தொகுப்பு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: