• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,439 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33 ! கொள்ளையடிப்பதை ம‌த்திய அரசு ஒப்புதல்!!

புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது.

 அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.

 தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார்.

 இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்.

 பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது.

 இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது.

 இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும்.

 தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும்.

 வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும்.

 அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி: தினமணி

4 Responses

 1. அரசாங்கத்திற்கு இறக்குமதி செலவை அதிகரிக்கசெய்யும் ஒரே பொருள் கச்சா எண்ணெய்! நமது நாணய மதிப்பை தக்கவைத்துக் கொள்ள ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும்!

  எந்த விலை விற்றாலும் மக்கள் நுகர்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது! இறக்குமதியின் தேவையும!

  மக்களின் வருமானம் உயர்ந்து கொண்டே தான் வருகிறது! பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தாமலேயே, சுமார் 8 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன! இருந்த போதிலும் மக்கள் சுய வாகன மோகம் கொண்டு
  வாங்கிக் குவிக்கின்றனர்!

  அனைவரிடமும் இருந்து வசூலிக்கப்படும் ஒரே சமச்சீர் வரி பெட்ரோல் வரியே! இது கொள்ளை அல்ல! நமது சொகுசுக்காக நாம் செலுத்தும் தண்டனைக் காசு!

 2. rammy அவர்களே,

  //மக்களின் வருமானம் உயர்ந்து கொண்டே தான் வருகிறது! //

  83 கோடி மக்கள் தினசரி வருமானம் ரூபாய் 20 என அரசாங்கம் சொல்லுகிறது. ஆனால் நீங்க வருமானம் உயர்ந்து வருகிறது என்கிறீர்கள்.

  //மக்களின் வருமானம் உயர்ந்து கொண்டே தான் வருகிறது! பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தாமலேயே, சுமார் 8 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன!//

  பொதுத்துறையான ரயில்வேயும்,தமிழகத்தின் போக்குவரத்து துறையும் லாபத்தில் இயங்குகிறது என பட்ஜெட் கூறுகிறது. லாபத்தில் இயங்கும் போது எதுக்கு மேற்கொண்டு கட்டணத்தை உயர்த்த போகிறது மக்கள் விரோத அரசு.
  மேலும் தமிழகத்தில், விதவிதமான போர்டுகளை போட்டு பேருந்து கட்டணத்தில் கொள்ளை அடிப்பது அனைவரும் அறிந்தது.

  // மக்கள் சுய வாகன மோகம் கொண்டு
  வாங்கிக் குவிக்கின்றனர்!//

  போதுமான பேருந்துகள் இல்லாததால் தான் ஆகப் பெரும்பாண்மை மக்கள் டூவிலர் வாங்குகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது என்பதே உண்மை. கார் வாங்குவோரை விட டூவிலர் வாங்குவதே அதிகம் எனும் போதே இதை தெரிந்து கொள்ளலாம்.

  //அனைவரிடமும் இருந்து வசூலிக்கப்படும் ஒரே சமச்சீர் வரி பெட்ரோல் வரியே! இது கொள்ளை அல்ல! //

  சமச்சீராக வருமானம் இல்லாத நாட்டில் அதாவது 36 இந்தியர்களுடைய வருமானம் 7.83 லட்சம் கோடி (போபர்ஸ் 2007), 83 லட்சம் கோடி இந்திய மக்கள் தினசரி வருமானம் ரூ 20 என இருக்கிற நாட்டில் வரி மட்டும் எப்படி சமச்சீராக வாங்க முடியும். ஸ்பெக்டரமை விட பல மடங்கு வரி தள்ளுபடி என்ற பெயரில் பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு இந்திய அரசு வாரி வழங்குகிறதே அது எந்த விதத்தில் சமச்சீர். அதே அரசுதான் மக்களுக்கான‌ மானியங்களை வெட்டுவது, இலவசம் என்ற பெயரில் சிறிய அளவில் கிள்ளி தந்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. இதுபற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன?

  //நமது சொகுசுக்காக நாம் செலுத்தும் தண்டனைக் காசு//
  மக்கள் சொகுசுக்காக ஆசைபடுவதாக கூறும் நீங்கள் 5000 கோடி ரூபாய் அம்பானி வீடு கட்டிய வக்கிரத்துக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள்?

 3. புமாஇமு பதில்கள் மிக அருமை.

 4. செங்கொடித் தோழர்களே!

  20 ருபாய் வருமானம் பெறுவோர் எண்ணெய் விலையேற்றம் குறித்து விசனப்படுவதில்லை!வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவும் இக்காலத்தில், தனிநபர் வருமானம், குறிப்பிட்டுள்ள அளவை விட அதிகமே!

  அம்பானியின் ஆடம்பர வீடு ஒரு அசிங்கமே!

  எண்ணையின் உபயோகம் கட்டுப் படுத்தப் படவேண்டும்! விலை ஏற்றம் கடுமையாக இல்லாமல் இருத்தல் நலம்! வளர்ந்த நாடுகளை விட டீசல் விலை இங்கு குறைவு தான்!

  நாட்டைக் கேவலமாக சித்தரிக்கும் போக்கு தவறு! மாற்றங்களை விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வாருங்கள்!

  பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்! வெல்க பாரதம்! வளர்க தமிழகம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: