• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 210,394 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஓயாது, அது ஓயாது, பட்டினிப் போர் ஓயாது!

ஓயாது, அது ஓயாது, ஓயாது
பட்டினிப் போர் ஓயாது
கொள்ளையர் கூட்டத்தின் ஆட்சி முடியும் வரை
இந்த ஆயுதப் புரட்சி ஓயாது
அது ஓயாது

பாத்தி கட்டிய ஏர்
பாத்திகள் என்னுடையது என்கின்றது
நாற்றைக் நட்ட கைகள்
அவை எங்களுடையது என்கின்றன
கதிர்களை வெட்டும் அரிவாள்
விளைச்சல் தனது என்கின்றது
ஓயாது ஓயாது

கன்னானின் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்றது
குயவனின் அடுப்பு கனல்கின்றது
பறை தான தான தான என ஒலிக்கின்றது
ஓயாதது ஓயாது என அறிவிக்கின்றது

காலில் விழுந்தவர் எல்லாம்
கத்தியைத் தீட்டுகின்றார்கள்
நாங்கள் அடிமைகள் என்றவர்
கடப்பாரைகளை கூறாக்குகின்றார்கள்
குறுக்கே வரும் திருடர்களையும் கொள்ளையர்களையும்
வெட்டி வீழ்த்திக் குவிக்கப்படுவார்கள்.
சகோதரர்களே
அது ஓயாது

எறும்பு ஊர்வலம் போகின்றன
(அவற்றை தின்ற) பாம்புகள் நடுங்குகின்றன
ஆட்டுமந்தைக் கூட்டம் பாய
ஓநாய்கள் ஓடுகின்றன
மாடுகள் கூட்டம் கூடி வர
புலிகள் தப்பி ஓடுகின்றன
ஓயாது அது ஓயாது ஓயாது

தெலுங்கில் இயற்றியவர்:  கத்தார்
ஆங்கிலத்தில் மொழியாக்கியவர்: பார்ச வெங்கடேஸ்வர் ராவ் மற்றும் அந்தார தேவ் சென்
தமிழில்: கவிஞனல்லாத ச.சீ.இராஜ‌கோபாலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: