• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,777 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சமச்சீர் பாடபுத்தகங்களை உடனே வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

சமச்சீர் பாடபுத்தகங்களை பாசிச ஜெயா அரசு வழங்காமல், மாணவர்களின் படிப்பை பற்றி கவலைப்படாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ள நிலையில் இப்பிரச்சனையில் பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி கொண்டு இருப்பதையும், பாசிச ஜெயா தனியார் கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும்  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் கிளை தோழர்கள் விளக்கி பேசினர். அதன் பின்னர் புமாஇமு தலைமையில் பாசிச ஜெயாவின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவும், உடனே பாடபுத்தகங்களை வழங்க கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 10.30 மணி அளவில் சாலை ஈ.வெ.ரா சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் சுமார் 45 நிமிடம் நீடித்தது. பின்னர் மாணவர் மத்தியில் பேசிய கிளைத்தோழர்கள் தொடர்ந்து இப்பிரச்சனை முடியும் வரை போராட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

2 Responses

 1. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே, பொறுக்கித்தனமானவர்கள் என்று போலீசாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்த பொதுக்கருத்தை பொய்ப்பித்து; இக்கருத்தை செரித்துக்கொண்டு தங்களை இதுவரை யாரெல்லாம் இழித்துப்பேசி வந்தனரோ , அவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் சார்பாக, – பொதுப்பிரச்சினைக்காக- தெருவில் இறங்கிப் போராடியிருக்கின்றனர், மரியாதைக்குரிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.
  தக்க தருணத்திலும், உணர்வுப்பூர்வமான பங்கேற்புடனும், கட்டுக்கோப்பான முறையிலும் நடத்தப்பட்டிருக்கும் இப்போராட்டம் வரவேற்கத்தக்கது, வாழ்த்துதலுக்குரியது. வெறுமனே, வார்த்தைகளால் வாழ்த்துக்கள் பரிமாறுவதை விட, இன்னொரு நாள், அதே இடம், அதே மாணவர்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை மறித்து நின்றால் அவர்களை நெருங்கிச் செல்லுங்கள், அவர்கள் உரக்கச் சொல்வதை திருப்பிச் சொல்லுங்கள், அவர்களது கரங்களைப் பற்றி நில்லுங்கள்!
  இதை விட வேறு எப்படி, அவர்களுக்கு நன்றி சொல்லிவிடமுடியும்?

 2. அன்புள்ள சகோதர்/சகோதரி,

  மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

  பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

  தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

  நன்றி.

  அன்புடன்,
  அதிரைக்காரன்
  adiraiwala@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: