• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,941 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

மாணவர்கள் பொறுக்கிகளா ? ரவுடிகளா? பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

மாணவர்கள் பொறுக்கிகளா ? ரவுடிகளா?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

நிகழும் விக்ருதி வருடம் மாசி மாதம் 25-ம் தேதி (09.03.2011)  முகூர்த்த நாளா என்பது தெரியவில்லை. ஆனால் விசேச நாளாக மாணவர்களுக்காக மாறிவிட்டது. ஆம் அந்தநன்னாளில் காலை சுபமுகூர்த்த வேளையில் மண்ணைக்காக்க, தன் கல்லூரியைக்
காக்க  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். யார்
யாரெல்லாம் பொறுக்கியாக, விளாங்காதவனாக, ஊதாரியாக, முடிச்சவிக்கியாக இந்த நடுனிலை பத்திரிக்கைகளால் அறிவிக்கப்பட்டார்களோ, மொட்டைத்தலையன் சோவினால்
தண்டிக்கப்பட வேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டார்களோ அவர்கள் இதோ இப்போது அவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

பச்சையப்பன் கல்லூரியின் நிலம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பறிக்கப்பப்படுவதற்கெதிராக மாணவர்கள், பேராசிரியர்கள் என தொடர்ச்சியாக போராடிவருவதைமுன்பு வினவில் வெளியான கட்டுரையில் பார்த்தோம். தன் கல்லூரியைக்காக்க,
ஒரு பிடி மண்ணை விடுக்கொடுக்கமுடியாதென அறிவித்த அம்மாணவர்கள்,அவர்களுக்கு வாரி வழங்கிய அப்பகுதி மக்கள்  என  மண்மீட்பு போராட்டவரலாற்றில் இதோ இந்த உள்ளிருப்பு போராட்டம் ஒரு முக்கிய மைல்கல்.

வழக்கம் போல  நேற்று பொதுவாகத்தான் விடிந்தது, மாணவர்கள்
பேருந்திலும்,னடந்தும், இரு சக்கர வாகனங்ளிலும் வந்து கொண்டிருந்தனர்.பேராசிரியர்கள் ஆட்டோக்களில் வந்து கொண்டிருக்க,எப்போது நாம் சாகடிக்கப்படுவோம் என கவலையே உருவாய் வீற்றிருந்தமரங்கள் இப்படி எல்லாம் இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில்  பணக்காரர்களின் அரிப்புக்காக
நம்முடைய வாழ்வு பறிக்கப்படுவதை எண்ணி துடித்துக்கொண்டிருந்த மாணவ பேராசிரியர்களின் இதயங்கள் சொல்லின இது இயல்பான நாள் அல்ல, இது மாணவர்
வரலாற்றில் முக்கிய நாள் என்று.

காலையில் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் வந்தார்கள், பேராசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பறையொலி கேட்டதும் மாணவர்கள்வெடித்துக்கிளம்பினார்கள். காப்போம் பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்
என்ற முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. பல பேராசிரியர்கள் ஆதரவளித்து வாழ்த்தினார்கள். சிலர் கல்லூரி முதல்வரின் கையாட்களாக இருந்து மாணவர்களை மிரட்டினார்கள். தன் கல்லூரியைக்காக்க வீரஞ்செறிந்த போராட்டத்தில்
இறங்கிய மாணவர்களின் முன்னால் மிரட்டல்கள் தவிடு பொடியாயின.

மாணவர்களே தங்களை ஒழுங்கு படுத்தினார்கள், கட்டுப்படுத்தினார்கள். வெளியே “ரூட் அடிப்பவனாகவும்,புட் போர்ட் அடிப்பவனாகவும்”
சித்தரிக்கப்பட்டவர்கள் பொறுப்பாயியிருக்க, பொறுப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் சொன்னார் “மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது”.
பொதுவாக ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வகுப்பறையில் மாணவர்களால் பதில் சொல்ல முடியாது, அவர்களுக்கு தெரியாத, புரியாதவற்றையே கேள்வி கேட்கும் ஆசிரியர் தற்போது தங்களுக்குப்புரிந்த, தெரிந்த ஒரு விசயத்தை அவர் கேட்கையிலே  மாணவர்களின் எதிர் பதில்கள் கேள்விகளாக மாறின.

” சார் நீங்க யாரு ? இந்த கல்லூரியில வேலை செய்யும் ஒரு ஊழியர் நீங்க எப்படி திட்டம் நிறுத்தப்பட்டதுன்னு சொல்லுவீங்க?, இதற்கு அப்ரூவல் கொடுத்தது ட்ரஸ்ட் சேர்மேன் ஐசரி கனேஷ், திட்டத்தை அறிவிச்சது சி.எம்.ஆர்.எல்  இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” நான்காயிரம் மாணவர்கள் கலந்து கொண்டதைப்பார்த்து கல்லூரியின் பொறுப்பற்ற பொறுப்பு முதல்வர் சேகருக்கு வியர்த்து கொட்டியது.

அவரின் வார்த்தைகள் தடுமாறின “கணேஷ் சார் காஞ்சிபுரம் கான்வொகேசனுக்காக போயிட்டார், தேர்தல் நேரத்தில அதிகாரிங்க வரமாட்டாங்க நீங்க இங்க போராடுறதுல பிரயோசனம் இல்லை.”

இங்க நாங்க எல்லாம் கல்லூரியை இடிக்கப்போறாங்கன்னு போராடிகிட்டு இருக்குறோம், கான்வொகேசன் ஒரு கேடா? என்னது அதிகாரி, அரசியல்வாதிகள் வரமாட்டாங்களா? மாணவர்கள் நலனுக்கு அப்பாற்பட்டதுதான இந்த தேர்தல் ?
எங்களுக்கு பயன் படாத இந்த தேர்தலை ஏன் நாங்க மதிக்கணும்? எதுக்கு இந்த தேர்தல் எங்க ரத்தத்தை உறிஞ்சி எடுக்கறதுக்கா? கேள்விகளைகண்டு ஓடிப்போனார் முதல்வர் சேகர்.

அவரின் கைத்தடிகளாக செயல்படும்  சிலர்  “இதை விடுப்பா, 25 நாளில் சரி செய்யறமின்னு சொன்னாங்க ஒரு பதிலும் வரலை? என்னைக்கு அப்படி இடிக்கப்போறாங்களோ அப்ப கூப்பிடுறோம் வாங்க” என்றார்கள்.

புரியாததை,விளங்காத படிப்பை சொல்லிக்கொடுத்து மாணவனை சுயமாக சிந்திக்கவிடாத இந்த படிப்பை சொல்லித்தரும் சில ஆசிரியர்கள் சமூகப்பிரச்சினையிலும் தங்கள் பேச்சை மட்டுமே கேட்க வேண்டுமென நிர்பந்திக்கிறார்கள். ஆனால்  தன்மான
உணர்வில்லாத சில ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கிறர்கள்
மாணவர்கள்,மூக்குடைந்தார்கள் போலி ஆசிரியர்கள்.

மாணவர் கூட்டத்தின் முன் வந்து கெஞ்சிய முதல்வர், கூட்டத்திற்கு பின் சென்று மாணவர்களை மிரட்டினார், துரத்தியடிக்க முனைந்தார். மதியம் அறக்கட்டளை உறுப்பினர்கள் வேறு ஒரு விழாவிற்காக கல்லூரிக்குள் பின்புறமாக வந்து  உடுப்பி ஹோட்டல் பிரியாணி தின்றுவிட்ட போனார்கள். பச்சையப்பன் கல்லூரியை விற்று தின்னும் படித்த பாரம்பரியமிக்க உறுப்பினர்கள்
பிரியாணியைத்தின்று கொண்டிருக்க,  பொறுக்கிகளாக இந்த நடுத்தர
வர்க்கத்தால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் சோறு, தண்ணியின்றிபோராடிக்கொண்டிருந்தார்கள்.

பிரியணி தின்றுவிட்டு,வாயில் பீடா போட்டபடி மீண்டும் வந்தார் முதல்வர் “நாங்களும்தான அன்னைக்கு உண்ணாவிரதம் இருந்தோம்”

மாணவர்கள் பொறுக்கித்தனம் செய்கிறார்கள், அவர்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறது, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென வாய்பிளக்கும் ஊடகங்கள்  இந்த உள்ளிருப்பு போராட்டதை ஆதரித்து பேசுமா என்ன? எந்த
தொலைகாட்சி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

நடிக, நடிகைகளின் உடல் ரகசியங்களை எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும் என நினைத்துதான் மாணவர்களின் போராட்டத்தை / போராட்டச்செய்தியைவெளியிடாமலிருந்தார்களோஎன்னவோ?
வெளியே போலீசுப்படை காத்துக்கொண்டிருந்தது, எப்போது மாணவர்களை கடித்துக்
குதறலாம் என்று. ஒவ்வொருமுறையும் மாணவர்களிடம் மூக்குடைபட்டு திரும்பி மீண்டும் வரும் போது முதல்வர் சேகர் கேட்ட கேள்வி “எப்போது முடிப்பீங்க” முடிந்து போகப்போகிற வாழ்க்கைக்காக, தாழ்த்தப்பப்ப , பிற்படுத்தப்பட்ட
மாணவர்களின் படிப்பு பறிபோகக்கூடாதென மாணவர்கள் போராடுகிறார்கள்.

எல்லாம் தெரிந்த முதல்வரோ எப்போது முடிப்பீர்கள் என
கேட்டுக்கொண்டிருந்தார்.மாணவர்கள் என்றலே புட் போர்ட் அடிப்பார்கள், பொறுக்கித்தனம் செய்வார்கள்
என பார்ப்பன வாய்பிளக்கும் பத்திரிக்கைகளும் இதைப்பற்றி
வாய்திறக்கவேயில்லை.

மாணவர்களுக்கு பேராசிரியர்களும், அலுவலர்களும் மனப்பூர்வமான ஆதரவை அளித்தார்கள்.தன் கல்லூரியைக்காக்க, தங்களின் கல்வி உரிமையைக்காக்க மாணவர்கள் போராடுகிறார்கள், அவர்களின் போராட்டத்திற்கு நாம் என்னசெய்யப்போகிறோம்?

அடுத்த நாள் (10.03.2011)பகலில் உள்ளிருப்பு போராட்டம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் எழுத்துமூலமான  வாக்குறுதி அளித்ததன் பெயரில்
இந்தபோராட்டம் தற்காலிகமாக மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. மண்மீட்பு போராட்டம் ஏதோ இரு நாள்கள் மட்டுமென நின்று விடாது. இது ஆளும் வர்க்கத்திற்கோர் எச்சரிக்கை. மாணவர்கள்  தங்களின் வரலாற்றை எழுத தயாராகிவிட்டார்கள்.அவர்கள்  ஆளும் வர்க்கத்தின் சாவு செய்தியையும் சொல்லியனுப்புவார்கள்.  பச்சையப்பன் கல்லூரியின் ஒரு செங்கல் பெயர்க்கப்பட்டால் ஆளும் வர்க்கம் முழுமையாக தகர்க்கப்படும் என்று கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். கடந்த கட்டுரையில் கடைசிப்பகுதியை மீண்டும் நினைவு கூர்வோம். பதில் உங்கள் கையில்

 

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: