• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,156 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.

சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, ‘மீட்டிங்’ என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். ‘சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.

காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர் (தினமலர், 19/11/2009).

——————————————————————–

//’சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.//

முதலாளித்துவ அறிவுஜீவிகளே!
தனியர்மையத்தின் உயிர் நாடியே இலாபம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

இப்போது சொல்லுங்கள், தனியார்மயத்தினால் தான் வேலை கிடைக்கிறதா? அல்லது இலாபம் கிடைப்பதால் மட்டுமே தனியார்மயம் வேலை கொடுக்கிறதா?

//பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.//

இது தனியார்மய பயங்கரவாதம் அல்லாமல் வேறு என்ன?

ஐ டி அறிவுஜீவிகளே!

இப்போதாவது தொழிச்சங்கத்தின் தேவை புரிகிறதா?

2 Responses

 1. சார், இந்த விபரம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே வெளி வந்திடுச்சு. சென்னை மட்டுமில்ல, உலக அளவிலேயே சோனிக்கு இறங்குமுகம். சென்னை உட்பட 4 மையங்கள் மூடப்பட்டு 1600 பேர் அனுப்பப்பட்டுள்ளார்கள். நீங்க ஒரு மொபைல் வாங்கினதுனால கம்பெனி லாபத்துல இயங்கிடுமா என்ன.

 2. தொழிற்சங்கத்தின் தேவையை கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கிறது தனியார்மயம். அவசியமான பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: