• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையை கொள்ளையடிக்க நடந்த தேர்தல்

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை, தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் கல்வி அறக்கட்டளை. இதன் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10,000 கோடி. இந்த அறக்கட்டளையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த அறக்கட்டளையின் பயன்படுத்தபடாத சொத்து அதிக அளவில் உள்ளன. மதுரவாயலில் உள்ள கண்ணன் நகரில் கூட இதன் சொத்து உள்ளது.

இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளின் முக்கிய வேலையே இதன் சொத்தை தனது சொந்த நலனுக்கு பாதுகாப்பதுதான். இதனால் பலபேர் அறக்கட்டளையின் நிர்வாகி ஆக தவம் கிடக்கிறார்கள். ஏனென்றால், ஒரு ஐந்து வருடங்கள் இந்த அறக்கட்டளையின் நிர்வாகியாக இருந்துவிட்டால் லட்சாதிபதி ஆகிவிடலாம். அறக்கட்டளையின் சாதரண நிர்வாகிகளே லட்சாதிபதி ஆகலாம் என்றால், தலைவர்கள் எத்தனை கோடிகள் சாம்பதிக்கலாம்?

இந்த அறக்கட்டளைக்கு ஐந்து வருடத்திக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். சொத்தை கொள்ளையடிக்க போட்டி போடும் இடத்தில் தேர்தல் எப்படி இருக்கும்? தேர்தல் அரசு கட்டுப்பாட்டில் நடக்கும் (நாடாளமன்ற, சட்டமன்ற தேர்த எந்த லட்சனத்தில் நடக்குது என்று உங்களுக்கே தெரியும்). அதுவும் நீதிபதிகளின் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெறும்.

ஆனால், இந்த தேர்தலில் வெளிப்படையாகவே கட்சி சார்பாக பங்கேட்பார்கள். கல்வி அறக்கட்டளைக்கு எதற்கு கட்சி சார்பாக பங்கேட்க வேண்டும்? இப்போது நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாக பரமசிவம், நிதியமைச்சர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் மற்றும் சம்பத், ஐசரிகணேசன் (இவர்களும் கட்சிகளை சேர்ந்தவர்கள் தான்) பங்கேற்றனர். இதில் ஐசரிகணேசன் தலைவராக தேர்ந்தெடுகப்பட்டுள்ளான். ராஜேந்திரனும் இந்த பதவிக்கு போட்டியிட்டான். இவன், ஏழை மாணவர்களின் 3 வருட கல்வி உதவி தொகையை வங்கியில் போட்டு கொள்ளையடித்து தின்னவன்.

ஏ.சி. சண்முகம், ஜேப்பியர், ஐசரி கணேசன் எல்லாம் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு பிள்ளைகள் தான். இந்த ஐசரிகணேசனுக்கு வேல்டெக் என்ற கல்வி அறக்கட்டளை (Vel Tech) உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தனக்கு சொந்த அறக்கட்டளை இருக்கும் போது பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு போட்டியிடுவது எதற்காக? அந்த அறக்கட்டளையின் தரத்தை உயர்த்த வேண்டியதுதானே?

அறக்கட்டளைக்கு நடைபெறும் தேர்தலில் அதன் கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் வாக்களிக்கலாம். இதில் மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 500. ஆனால் பதிவான ஓட்டுக்கள் 700!! தேர்தல் தண்ணி, பேனர்கள், பணம், அடியாட்கள், கள்ள ஓட்டுக்கள் மூலம் தான் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பரமசிவத்திக்கு மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகி இருந்தது. இதனால் பரமசிவம் நிராகரிக்கப்பட்டு, அடுத்து வந்த ஐசரிகணேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால், ஐசரிகணேசன் ஒன்னும் யோக்கியமானவன் கிடையாது. வேல்டெக் கல்வி அறக்கட்டளை மூலம் கொள்ளை அடித்து கொண்டிருக்கும், No. 1 கொள்ளையன் தான்.

மாணவர்களுக்கு, பேராசிரியர்களுக்கு இந்த பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தல் மூலம் எந்த பலனும் இல்லை. இந்த கல்வி அறக்கட்டளையின் கல்லூரிகளின் நிலைமை மிக மோசமாக தான் உள்ளது. ஆனாலும், இந்த கல்லூரியின் நிர்வாகம், மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்க செய்கின்றன. அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் கொள்ளை அடிப்பது தான். மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: