• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,339 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகளின் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகள், பதவி நீக்க செய்யக் கோரி கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் 08/09/2009 அன்று கொடுத்த மனுவின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

sellamman college page 1sellamman college page 2

4 Responses

 1. good..

 2. இந்த‌ மாணவிகள் மத்தியில் பு.மா.இ.மு செயல்படுகிறதா தோழர் ?

 3. கடந்த மூன்று வாரங்களாக செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டத்தையும் அம்மாணவிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தையும் நாளேடுகளில் கண்ட எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் மேலிட்டது. பொதுவில் மாணவர்கள் மத்தியில் விட்டேத்தி தனமும், மாணவர் இயக்கம், போராட்டம் என்றாலே பத்தடிதூரம் தள்ளிச்செல்லும் போக்கும் மேலோங்கி நிற்கும் இன்றையச்சூழலில் எந்த ஒரு (ஓட்டுக்கட்சி) அரசியல்வாதிகளின் தலையீடின்றி, தன்னந்தனியாக அதுவும் மாணவிகள்!, தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்வது என்பது பெரியவிசயம். இதனை சாத்தியப்படுத்திய செல்லம்மாள் மகளிர் கல்லூரி வீராங்கணைகளுக்கு பாராட்டுக்கள். இன்று கல்லூரிக்குள்ளே தொடங்கியிருக்கும் ஊழல் முதல்வருக்கு எதிரான உங்களது உறுதியான போராட்டம், பொதுவில் கல்வி வியாபாரமாக்கப்படுவதற்கு எதிரான, ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கப்படுவதற்கெதிரான போராட்டமாக உருமாற வேண்டும் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன் வைக்கிறேன், நிறைவேற்றுவீர்கள் என்ற முழு நம்பிக்கையோடு!

  அடுத்தகோரிக்கை ஆம்பள சிங்கங்களுக்கு, ரூட்டு தகராறு, என் ஆளை அவர் ஓவர்டேக் பண்ணிட்டான்னு பப்ளிக்கா அலம்பல் செய்கிறீர்கள்! நேத்து ரிலீசான புதுப்படபாடலுக்கும் புதுசா மெட்டு போட்டு உங்க ரூட்டில் அரங்கேற்றம் செய்கிறீர்கள்! ஓடுற பஸ்சில் பறந்து வந்து ஏறுகிறீர்கள், எகிறி குதுக்கிறீர்கள்! இதெயெல்லாம் குத்தமுன்னு சொல்ல வரலை! இளரத்தம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். புரியிது! இதெயெல்லாம் செய்றதுக்கு தனித்திறமை வேணுமென்பதெலலாம் வாஸ்தவம்தான்.

  ஆனா, சைலண்ட்டூக்கு பேர்போன பொம்பிள பிள்ளைங்க தன்னோட காலேஜ் ஊழல் முதல்வருக்கு எதிரா உறுதியா நின்னு சைலாண்டாவே சாதிச்சிருக்காங்களே!

  உங்கள் பங்குக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்!

 4. // இந்த‌ மாணவிகள் மத்தியில் பு.மா.இ.மு செயல்படுகிறதா தோழர் ? // அப்படீன்னு, தமிழு கேட்டிருக்காரு.

  நிச்சயம் பு.மா.இ.மு.வின் கைங்கரியம் இல்லாமல் இந்த போராட்டம் இன்று உங்களாலும் என்னாலும் பேசப்பட்டிருக்க முடியாது எனக் கருதுகிறேன்.

  செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் காட்டிய முனைப்பும் முன்முயற்சியும் உறுதியும்தான் முதன்மையானது என்றாலுங்கூட, அப்போராட்டத்தை பக்கத்துணையாய் நின்று வழிநடத்திச் சென்ற பு.மா.இ.மு. தோழர்களின் பங்களிப்பும் மகத்தானது!

  தமிழ்நாட்டில் எந்தக் கல்லூரி, மாணவர் இயக்கங்கள் செயல்பட அனுமதிக்கிறது. பல்வேறு இடையூறுகள், மிரட்டல்களை எதிர்கொண்டுதானே செயல்பட முடிகிறது. சாதாரண காலத்திலேயே இந்த நிலைமை. அதுவும் போராட்ட களத்தில் அந்த மாணவிகளை நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமலும், நைச்சியத்திற்கு பலியாகாமலும், போராட்டத்தின் இயக்கப்போக்கை புரியவைத்து முன்னெடுத்து செல்வது என்பது, என்னைப் பொறுத்தவரை போர்களத்திற்கு நிகரானதுதான்.

  இதனை முன்நின்று வழிநடத்திய தோழர்களின் உழைப்பு, பாராட்டுக்குரியது மட்டுமல்ல, முன்னுதாரமானதுங்கூட!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: