நகரத்தில் உள்ள படித்த அறிவுஜீவிகளிடம் தீண்டாமையின் கொடுமையை பற்றி பேசினால் முதலில் அவர்கள் சொல்லுவது, “இப்ப யாரு சார் ஜாதி பாக்கறா?” என்பது தான்.
ஆகையால் தான், தீண்டாமை கொடுமையை உருவாக்கிய பார்பனியத்தின் ஊதுகுழல் பத்திரிக்கை ஆன “டைம்ஸ் ஆப் இந்தியா”-வில் இருந்து ஒரு செய்தி.
தீண்டாமை கொடுமையை தினம் தினம் அனுபவிக்கும் தாழ்த்தபட்டவர்களில், மிக மிக சொற்பமனவர்களே இந்த வன்கொடுமையை வெளியில் கொண்டுவருகின்றனர். 6-ம் தேதி ஆகஸ்டு, 2009 வந்த செய்தி தெரிவிப்பது என்னவென்றால், சண்டிகரில் உள்ள தாழ்த்தபட்டவர்களுக்கான தேசிய கமிஷனிடம் தினமும் 3-4 தீண்டாமை கொடுமை பற்றி புகார் வருகிறது என்கின்றனர். இந்த புகார் எல்லாம், தீண்டாமை கொடுமையால் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களால் இதற்கு மேல் தாங்க முடியாது என்ற கட்டத்தில் வெளியே கொண்டு வருகின்றனர்.
கிராமங்களில், தனி குடியிருப்பு, தனி கோயில், தனி சுடுகாடு……இன்னும் எத்தனையோ கொடுமைகள்.
அதில் ஒன்று தான், கீழே உள்ள படத்தில் காண்பது (இதுவும் “டைம்ஸ் ஒப் இந்தியா”-வில் 06/08/2009 அன்று வந்த புகைப்படம்.)…
ஆதிக்க சாதி வர்க்கமே, தாழ்த்தபட்டவருக்கு உன் வீட்டு டம்ளரில் தண்ணி கொடுத்தால் தீட்டு பட்டுவிடும்.
ஆனால், இதே தாழ்த்தபட்டவர் உன் நிலத்தில் ஓடாய் உழைத்து அதனால் வரும் லாபத்தை நீ எடுத்து கொள்ளும் போது மட்டும் ஏன் தீட்டு பார்ப்பதில்லை?
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் |
Leave a Reply