• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 180,306 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

ஒரு சீட்டிக்கு 40 இலட்சம் கொள்ளையடிக்கும் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, மேலும் ஒரு புதிய மருத்துவ கல்லூரி தொடக்கம்…

ஏற்கனவே, ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி நிர்வாகத்தில் உள்ளவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் உள்ள அயோக்கியதனம் ஊரேல்லாம் தெரியும். (http://timesofindia.indiatimes.com/articleshow/msid-4637045,prtpage-1.cms). இதற்கு அரசின் நடவடிக்கைகோ இல்லவே இல்லை.

இப்போது, ஒரு சீட்டிக்கு 40 இலட்சம் கொள்ளையடிக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கழைக்கழகம், மேலும் ஒரு புதிய மருத்துவ கல்லூரியை தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

————————————————————————————– இந்த ஆண்டு தமிழகத்தில் மேலும் இரு புது மருத்துவக்கல்லூரிகளை துவங்க எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.காஞ்சிபுரத்தில் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரிலான கல்லூரியில் 100 எம்.பி.பி. எஸ்., இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 இடங்கள் உள்ளன. தற்போது கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம் 65 இடங்கள் கூடுதலாக கிடைக்கவுள்ளதால், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை 348ஆக உயரும்.

சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின் சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புது மருத்துவக் கல்லூரியை துவங்கவும் எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இக்கல்லூரி திருச்சியில் துவக்கப்படுகிறது.

தனியார் பல்கலைக் கழகத்தின் கட்டுப் பாட்டில் இக்கல்லூரி செயல்பட இருப்பதால், இக்கல்லூரியிலிருந்து மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்கள் கிடைக்காது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த எம்.சி.ஐ., அனுமதி மறுத்திருந்தது. இதனால், முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இக்கல்லூரி இடம்பெறவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூன் 10ம் தேதி நடந்த எம்.சி.ஐ., செயற்குழு கூட்டத்திலும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.எனவே, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவது சந்தேகமே. (தினமலர், 23/07/2009)

————————————————————————————–

அரசு மருத்துவ கல்லூரின் அவல நிலை…. ஒரு சீட்டிக்கு 40 இலட்சம் கொள்ளையடிக்கும் சாராய ரவுடியின் கல்லுரிக்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால், அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இப்போது புரிகிறதா, அரசு தனியார் கல்விக்கு காவடி தூக்குவதும், அரசு கல்விக்கு மூடுவிழா நடத்துவது திட்டமிட்ட செயல் என்று?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: