• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 177,137 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

மாணவர்களை சட்டபூர்வ கொத்தடிமையாக்க திட்டகமிஷன் தீவிர பரிசீலனை…

தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து அடிக்கும் கட்டண கொள்ளையை சொல்லிமாளாது. அது மட்டுமில்லாமல், முதுகலை மாணவர்களை வைத்து இளங்கலை மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்க வைக்கின்றனர். செய்முறையையும் வகுப்புகளையும் முதுகலை மாணவர்களை வைத்து நடத்துகின்றனர். இதன்மூலம், ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய சம்பளமும் கல்லூரி கொள்ளை அடித்துக்கொள்கிறது. முதுகலை மாணவர்களுக்கும் பணம் கொடுப்பதில்லை. இந்த கல்வியில் என்ன தரம் இருக்கும்?

ஆனால், இப்போது, மாணவர்களை பேராசிரியர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, நூலகர்களுக்கு, தொழில்நுட்பப் பிரிவினருக்கு உதவி செய்ய, இது போன்ற பிற வேலைகளையும் செய்ய திட்டகமிஷன் திட்டத்தை வகுத்து வருகிறது (தினகரன், 28/06/2009).

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால்…

ஏற்கனவே மாணவர்களை கொள்ளையோ கொள்ளை அடித்து வரும் தனியார் கல்லூரிகள், மாணவர்களிடம் வாங்கும் வேலைக்கு சரியான சம்பளம் கொடுக்குமா?

தனியார் கல்லூரிகள், இந்த சட்டத்தை வரைமுறையோடு தான் பயன்படுத்துமா?

ஆக மொத்தம், இந்த சட்டம் மாணவர்களை சட்டபூர்வமாக கொத்தடிமையாக்கும். அதில்லாமல் வேறொன்றுமில்லை.


One Response

 1. வேலைக்கு தகுந்த ஊதியம் வேண்டும், ஊதியமல்லாமல் வேலை ஏதும் இல்லை என்கிற அடிப்படை தத்துவத்தை மாணவர்கள் கடைபிடிப்பது அவசியமே. தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்தினருடன் முறைத்துக் கொள்வதால் தங்களுக்கு பாதிப்புதான் மிஞ்சும் என்கிற பயத்தில் மாணவர்கள் இப்படியான அடிமைத்தனத்திற்கு கட்டுப்படுகிறார்கள்.

  ஒருவரை வேலைக்கு அமர்தினோமானால், அவருக்கு மருத்துவ (காப்பீட்டு) வசதிகள், ஆபத்து விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தக்க பாதுகாப்பு (காப்பீடு) வசதிகள், தான் செய்யும் வேலை நேரங்களை ஓய்வுகால பென்சனுக்கு கணக்கெடுப்பது, வீட்டிலிருந்து வேலைக்கு வரும்வழி பிரயாண செலவுகளில் பங்கெடுப்பது, நிர்வாகத்தின் இலாபங்களில் பகிர்வு போன்ற இதரபல அடிப்படை சட்ட திட்டங்களைங்களை மதித்து நடக்கக்காத காரணங்களுக்காக ஆட்சியாளர்களின் வேலை சம்பத்தப்பட்ட துறையினர் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கைகள் எடுத்து இதுபோன்ற அடிமைத் தனங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டு.
  அடாவடித்தனமாக அதுமீறி அடிமை படுத்தப்படும் இம்மாணவர்களின் மன உளைச்சளுக்கும் இதனால் இவர்களது படிப்பில் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் ஆகியவைகளுக்கும் நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும்.

  பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோலாக கொண்டு, கல்லூரி பல்கலைகழக பற்றாக்குறை நிலைகள் மற்றும் மக்களின் வறுமை ஆகிய காரணங்களால் இப்படி சமுதாயத்தின் இளைய தலைமுறைகளின் சக்திகளை இலவசத்திற்கு சுரண்டி தங்கள் உண்டியல்களை நிறப்பும் நிர்வாகத்தினர் நம் சமூகத்தின் விஷக் காளான்களே. சமுதாயத்தை உள்ளிருந்தே அரித்து அழிக்கும் முதல் எதிரிகளும் இவர்களே.

  மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தி வைக்கப்பட்டுள்ள மக்களாட்சி பிரதிநிதிகள் சமுதாயத்தின் அனைத்து தர வகை மக்களின் நலனுக்காக போராடி அநீதி அநியாயங்களை தட்டிக்கேட்டு சீரிய கடுமையான சோதனைகள் பல செய்து பலமிக்க வளமான சமுதாயத்தை அமைத்திட வழிசெய்தல் வேண்டும். இப்படி செய்யாத இவர்களும் தங்களது கடமைகளில் இருந்து தவறியதற்காக அதே மக்களால் தண்டிக்கப்படவும் வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: