• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

“தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை பற்றி மாநிலம் முழுவதுமிருந்து 120 புகார்கள் வந்திருக்கின்றன.

அவர்களது மாணவர் சேர்க்கை ஆவணங்களில் குறைபாடுகளும், குறைகளும் ஏராளமாக இருக்கின்றன. ‘வகையாகச் சிக்கிவிடுவோம்’ என்று பயந்துதான் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், நிர்வாக அலுவலர், கண்காணிப்பாளர் ஆகியோர் ஓடி ஒளிந்து கொண்டனர். ஆவணங்களையும் மறைத்து விட்டனர்…..

மளிகைக்கடை துண்டுச் சீட்டைப் போல் ஒன்றைக் கொடுக்கின்றனர். இதை கல்லூரிக்குக் கொண்டு சென்று கொடுத்தால்தான் இடம் கிடைக்கும். இவர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களில் கல்லூரியின் பெயரே இல்லை.

அரசு விதித்துள்ளபடி கவுன்சலிங் மூலம் சேரும் மாணவர்களிடம் 32,500 ரூபாயும், நிர்வாகப் பிரிவில் சேரும் மாணவர்களிடம் 62,500 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

ஆனால், தனியார் கல்லூரி முதலாளிகள் மாட்டுத் தரகர்களைப் போல, துண்டை வைத்து கைகளை மூடிக்கொண்டு ரகசிய பேரம் நடத்துகின்றனர். இந்த பேரம் பத்து லட்சத்தில் தொடங்கி ஐந்து லட்சத்தில் முடிகிறது.

நன்கு செயல்படும் ஒரு கல்லூரிக்கு ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையின் மூலம் முப்பத்தைந்து கோடி ரூபாய் கறுப்புப் பணமாகக் கிடைக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற சுரண்டல்களால் மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை கறுப்புப் பணம் கைமாறுகிறது.

அரசின் கணக்கில் வராத இந்தக் கறுப்புப் பணம் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு மீண்டும் பொறியியல் கல்லூரிகளாகக் குட்டி போடுகின்றன. இப்படிப்பட்ட கல்லூரிகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தால் கணக்கில் வராத பல ஆயிரம் கோடிகள் சிக்கும்.”

இவை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ச.பரமானந்தமோ அல்லது பு.மா.இ.மு சென்னை மாவட்ட இணைச்செயலர் தோழர் த.கணேசனோ பேசிய புரட்சிகரமான உரைவீச்சு அல்ல!

தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு வசூலிக்கப்படுவதாகவும், கட்டாய நன்கொடை என்ற பெயரில் பல லட்சங்கள் பிடுங்கப்படுவதாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் புகார் தெரிவித்ததையடுத்து, இதனை விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐவரடங்கிய ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் ராமசாமி, 25.06.09 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வழங்கியிருக்கும் வாக்குமூலம்தான் இது!

இதற்கு மேலும் இதில் இணைப்புரை எழுதுவதற்கு எதுவுமில்லை! இந்த அரசு தனியாரை தட்டிக் கேட்கும் என்று நம்புவதற்கு நாமொன்றும் கேணைகளுமில்லை! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-தமிழினி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: