• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 180,306 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

பெற்றோர்களை, மாணவர்களை வீதிக்கு வரவைக்கும் தமிழக அரசு…

  ‘புலி வருது’, ‘புலி வருது’ என்பார்களே, அந்த புலியும் வந்தேவிட்டது. ஆம், நடந்துகொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரைத் தான் ‘புலி’ என்று கூறிப்பிடுகிறோம். என்னடா, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தான் காலங்காலமாக நடைபெற்று வருகிறதே, இதிலென்னா ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா?

  பாரளமன்றத் தேர்தல் சமயத்தில், கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக கண்டணக் குரல்கள் எழும்பிய போது, தேர்தல் சமயத்தில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியது என்று திமுக அரசு கூறியது. அதுமட்டுமில்லாமல், என்னெவோ சட்டப்பேரவை தொடங்கியவுடன் இந்த தனியார் கல்வி கட்டணக் கொள்ளைக்கு சாவு மணி அடிக்கப்போவது போல் பெரிய ‘பில்டப்’ விட்டாங்க. அதனால் தான், இந்த சட்டப்பேரவைத் தொடரை ‘புலி வருது’ என்று கூறிகிறோம். சரி, அது ‘புலி’யா? அல்லது ‘புளி’யா? அல்லது ‘நாயா’? என்று பார்ப்போம்.

    ஆம், ஜுன் மாதம் தொடங்கியதோ, இல்லையோ ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளையை படிக்க வைக்க பெற்றோர்கள் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை வர்க்க பெற்றோர்கள் மிக மனவேதனைக்கு உள்ளாகிறார்கள். ஆனால், பருவமழை பொய்த்தாலும், கல்வி நிறுவனங்களுக்கு காசு மழை பொழிவது தவறுவதில்லை. சரி, அந்த ‘புலி வருது’ கதைக்கு மீண்டும் வருவோம்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற ‘நாய் சண்டை’:
   
   என்னடா, நாய்கள் எப்படி சட்டமன்றத்தில் நுழைந்தது என்று கேட்கிறீர்களா? நீங்கள் வேற ஏதாவது நினைத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல. சரி விசயத்திற்கு வருவோம், நாய் சண்டையைப் பார்த்தால் தெரியும், ஒவ்வொரு நாயும் ஆவேசமா கத்திக் கொள்ளும். அதேபோல் தான் எல்லாக் கட்சியை ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும், கல்விக் கட்டணக் கொள்ளை விவாதத்தின் போது கத்திக் கொண்டார்கள். சில ஆவேசக் கூச்சல்களைப் பார்ப்போமே? (தினமலர், 24/06.2009).

சண்முகம்-அதிமுக: 2006-ம் ஆண்டு 624 கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது 1,154 கல்லூரிகள் உள்ளன. மூன்றே ஆண்டுகளில் 521 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
    
பொன்முடி – உயர் கல்வி அமைச்சர்: தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளைப் துவங்குவதில் என்ன தவறு?

சண்முகம்-அதிமுக: தவறு என்று சொல்லவில்லை….

நமது கேள்வி: அப்போ, எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும், தனியார் கல்வி கட்டணக் கொள்ளையை மனமார ஆசீர்வதிக்கிறீர்க்கள் தானே? அப்புறம் என்ன கூச்சல் வேண்டிக்கிடக்கிறது?

 
சண்முகம்-அதிமுக: கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் கடந்த ஆண்டு மட்டும் 40 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. நன்கொடை அனைத்தும், ‘டிமாண்ட் டிராப்ட்’ மூலம் பெறப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் ஆய்வு செய்தால் இதை அறிய முடியும். 

பொன்முடி – உயர் கல்வி அமைச்சர்: உயர்கல்வி மன்றத்தின் ஆய்வுக்குழு சோதனை மூலம் நான்கு கல்லூரிகளில் முதலாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நமது கேள்வி: அந்த நடவடிக்கை எடுத்த நான்கு கல்லூரிகளின் பெயரை சட்டமன்றத்தில் கூறிப்பிடாத மர்மம் என்ன? மக்களுக்கான ஆட்சி என்றால், சட்டமன்றத்தில் அந்த நான்கு கல்லூரிகளின் பெயரை வெளிபடையாக கூறவேண்டியது தானே? எந்ததெந்த நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சொல்ல முடியுமா? முதலில், எந்த தனியார் கல்லூரி நன்கொடை வசூலிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? (இந்த ரகசியம் தான் தனியார்மய கல்விக் கொள்(ளை)கையே அரசின் கொள்கை என்பதன் உண்மை முகமோ?)
 

 

டில்லி பாபு-மார்க்சிஸ்ட்: கல்விக் கட்டணத்தை அரசே வசூலித்து, சுயநிதிக் கல்லூரிகளுக்குஸ் செலுத்தும் நிலை கொண்டு வரவேண்டும். 

நமது கேள்வி: அரசுக் கல்விக்காக போராட வேண்டுமா? அல்லது தனியார் கல்வி வியாபாரதிற்கு காவடி தூக்க வேண்டுமா? சிபிஎம் ஆளும் மேற்கு வங்காளம், கேரளாவில் தனியார் கல்வி கட்டணக் கொள்ளை நடப்பதின் ‘ரகசியம்’ என்ன?

 
பீட்டர் அல்போன்ஸ்-காங்கிரஸ்: பெரிய தொழில் நிறுவங்களின் உதவியுடன் புதிய கல்லூரிகளைத் துவக்க வேண்டும்.

நமது கேள்வி: இதற்கு பெயர் என்ன? ஓ, நீங்க கல்வி வியாபாரத்தையும், கொள்ளையையும் தரகு முதலாளிக்கு, அமெரிக்க முதலாளிக்கு கொடுத்து விடலாம் என்று சொல்லுகிறீர்களா?

 
மணி-பாமக: கல்லூரிகளில் நன்கொடை மூலம் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக கைமாறுகிறது என்று உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி சொல்லியிருக்கிறார். அரசியல்வாதிகள் கல்லூரிகள் துவங்குவதில் என்ன நோக்கம் உள்ளது? அரசியல்வாதிகள் துவங்கியுள்ள கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து பட்டியல் வெளியிட வேண்டும்.

நமது கேள்வி: சரி, பாமக அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரிகளின் கட்டண கொள்ளையை வெளியிடலாமே? கேப்டன் விஜயகாந்த்? ராமதாசின் வன்னியர் அறக்கட்டளை கல்வி நிறுவனம்?

 

   இதை எல்லாம் விட கிளைமேக்ஸ் சீன்லா, அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னாரு பாருங்க, “உதவி பெறாத தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்ட மசோதா, நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும்.” சரி, இதுவரைக்கும் நடந்த கட்டணக் கொள்ளைக்குஎதிரா ஒரு சிறு துரும்பை கூட அசைக்காத அரசு, இனிமேல் என்னவோ கிழிக்கப்போகுதாம். இது யாரு காதுல சுத்தர பூ?

   இந்த வாய்சவடாலில் இருந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் போன்ற எல்லா ஓட்டுப்பொறிக்கி அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகின்றனர். அது தான், “தனியார்மய கல்விக் கொள்(ளை)கையே அரசின் கொள்கை”. என்ன, அரசியல்வாதிகள் இவ்வளவு வெளிப்படையாக கூரியும், இந்த கொள்கையை நீங்கள் நம்பவில்லையா? இதோ, அரசின் தனியார்மய கல்விக் கொள்ளையை நடைமுறைபடுத்தி வருவதின் சாட்சியங்கள் பின்வருமாறு.

 
30 மாநகராட்சி பள்ளிகள் மூடல் (சென்னையில் மட்டும்):

   போதிய மாணவர்கள் சேரவில்லையென்று, சென்னையில் மட்டும் இந்த மாதம் 30 மாநகராட்சி பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளது (தமிழ் ஓசை, 11/06/2009). போதிய மாணவர்கள் சேரவில்லையென்பது, எவ்வளவு பெரிய அண்ட பொய் என்பது பின்வரும் செய்தி சொல்லும்.
  
    கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையோ, வெறும் 8 பேர்கள் தான். அதாவது, 300 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்!! அப்பள்ளியில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கையையே நிறுத்திவிட்டர் (தினமலர், 24/06.2009).

நமது கேள்வி: இப்ப சொல்லுங்க, அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு போதிய மாணவர்கள் சேராதது காரணமா? அல்லது ‘அரசு பள்ளிகளை மூடவேண்டும்’ என்ற அரசின் கொள்கை காரணமா?

பள்ளியை புறக்கணிக்கும் சிறுகளத்தூர் மாணவர்கள்:

    சென்னையில், குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்யாக உயர்த்த, கடந்த ஆண்டு கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு ‘டி. டி. ‘ எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். அது மட்டுமின்றி, ஏழு ஏக்கர் நிலமும் பள்ளிக்கட்டத்திற்கு ஒதுக்கியுள்ளனர். ஆனால், அரசு இந்த வருடம் அப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக உயர்த்தவில்லை. ஆகையால், பெற்றோர்கள் 23/06/2009 முதல் “பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே குழந்தைகளை அனுப்புவோம்” என்று போராடி வருகின்றனர். (தினமலர், 25/06/2009)

பள்ளியை பூட்டி பொதுமக்கள் போராட்டம்:

   ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி அருகே பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை 2007-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு கல்விதுறை மூலம், பள்ளி கல்விக்குழுவினர் பரிந்துரை செய்தனர். ஆனால், இதுவரை பள்ளியின் தரம் உயர்த்தபடாததை கண்டித்து 24/06/2009 முதல் பள்ளிக்கு பூட்டு போட்டு, தரம் உயர்த்தும் வரை போராட போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில், எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பொதுமக்கள் பங்கெடுத்து
வருகின்றனர். (தினமலர், 25/06/2009)

அரசுக் கல்லூரிகளில் இலவச கல்வி, துணைவேந்தர் கோரிக்கை நிராகரிப்பு:
 
   “தமிழக அரசு 30 கோடி ரூபாய் கொடுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்துவிடலாம். 500 கோடி ரூபாய் வழங்கினால், அனைத்து பல்கலைக்கழங்களிலும் தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்துவிடலாம்” என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  ராமச்சந்திரன் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தார். இந்த கோரிக்கை நிரைவேற்றப் பட்டால் மாணவ சமுதாயம் பெரிதும் பயனடையும். ஆனால், இப்பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. (தினமலர், 23/06/2009)       
 
நமது கேள்விகள்:
 
   கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?
   சாராயம் ஊத்தி கொடுப்பது தான் அரசின் கடமையோ?
   டாஸ்மார்க் கடையை, தமிழ்நாட்டிலே ஒவ்வொரு மூலைக்கும் திறக்க மட்டும் நிதி ஆதாரம் உள்ளதோ?
   ஒவ்வொரு எம்.எல்.ஏ வும் பல நூறு கோடிகளை ஐந்தே வருடத்தில் எப்படி சுருட்ட முடியுது?
   கருணநிதியும், ஜெயலலிதாவும் எப்படி பல்லாயிர கோடிகளுக்கு அதிபதி ஆனார்கள்?

தனியார் கல்லூரிகளில் எந்த முறைக்கேடும் நடைபெறவில்லை, அமைச்சர் பொன்முடி அறிவிப்பு:

   சாராய ரௌடி-ஜேப்பியாரு, திமுக-ஜெகத்ரட்சகன், அதிமுக-தம்பிதுரை, அநீதிக் கட்சி-ஏசி சண்முகம், தேமுதிக-விஜயகாந்த், சாராய உடையார் முதற்கொண்டு ஆன்மிக வள்ளல்-பங்காரு அடிகளார் வரைக்கும் கல்வி வள்ளல்கள் என்று சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பது ஊருக்கே தெரியும்.

   ஆனால், தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி என்ன சொல்லியிருக்கிறானு தெரியுமா? “தனியார் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், எந்த முறைக்கேடும் நடைபெறவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண கொள்ளை நடந்தற்கான எந்த சாட்சியமும் இல்லை” என்று கூறியுள்ளார். (தி டைம்ஸ் ஆப் இந்தியா, 26/06/2009). அப்போ, ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக எங்கிருந்து கைமாறுகிறது? 
 
   இப்ப சொல்லுங்க, இனியும் இந்த ஒட்டுபொறுக்கி நாய்கள் அரசு கல்வி கொடுக்கும்மென்று நம்பலாமா?

சரி, கடைசியா நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு சொல்கின்றன என்று பார்ப்போம்:

   கல்விக் கட்டணங்களும், நன்கொடைகளும் மிரட்டும்போது அழுது புலம்பி, அரசிடமோ அல்லது நீதிமன்றமோ செல்கிறோம். ஆனால், நீதி தேவதையின் தீர்ப்போ, “அரசுக்கொள்ளையில் நீதிமன்றம் தலையிட முடியாதாம்! அரசும் தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளையில் தலையிடக் கூடாதாம்?”. இவ்வாறு, உச்ச (அ)நீதி மன்றம் உத்தரவிடுகின்றது.  
 
   விடை வேறெதும் இல்லை! தனியார்மய கல்விக் கொள்ளையை  வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!
   அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்!
   வீதியில் இறங்கி போராடுவோம்!
   இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: