• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,394 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சரசுவதி – சாராயவதி (புரட்சிகர கவிதை)

வெள்ளைக் காரன்
கொல்லைப் புறமா
நுழைஞ்ச போது,

பல்லைக் காட்டின
பனியாக் கும்பல்,

சரச மாட
சரசுவதிய அனுப்புச்சு!

அசிங்கமா இருந்தாலும்,
அவ ஆங்கிலத்த,
அசத்தலாவே பேசினா!
இந்தத் தேவடியாத் தனத்துல
தேவ பாசையே மறந்து போச்சு!

அடையாளம் தெரிஞ்சாலும்,
அப்பான்னு கூப்பிட
முடியாத பிள்ளைகள்,
அவன் போனதுக்கப்புறம்
வந்து நிக்குது
வாரிசுரிமைக்கு!

அப்பன் புத்தி
அப்படியே இருந்தாலும்,
அரசுக்கல்வி, இலவசக்கல்வின்னு
அமர்க்களமாதான் ஆரம்பிச்சான்!

எல்லாரும் படிச்சாதான்
ஏமாத்த முடியும்னு
அனைவருக்கும் கல்வின்னான்!

ஆடுமாடு மேய்க்கிற மாதிரி
அடைச்சு வச்சே பழக்கின
அப்பாவி சனமெல்லாம்
அப்பன்காரன் கல்விதான்
அருமைன்னு சொல்ல வச்சான்
அங்கதான் ஆப்பு வச்சான்!

அப்பப்ப ஆளெடுத்து
அரசு வேலைன்னு
அசர வச்சான்!

அயல் நாட்டுக்குப் போனாதான்
அருமைன்னு நினைக்க வச்சான்!
அங்க் போ முண்டமெல்லாம்
ஆமான்னு த்லையாட்ட,
அட்ரா சக்க,
அப்படித்தான் சொல்லனும் னான்!
அந்த சந்துல தான்
வந்தான் கொஞ்சம் பேரு!
அவன் யாரு?

நீயெல்லாம்
மாடு மேய்க்கத்தாண்டா
இலாயக்கு என்று,
மண்டையில் கொட்டிய
வழுக்கைத் தலை வாத்தியாரை,
வன்மத்துடன் முறைத்தபடி,
வாங்கறது கவர்மெண்டு காசுன்னா
வாய்க்கொழுப்பு நெண்டத்தானே
செய்யும் என் வசைபாடியவர்கள்
எல்லாம் வந்து குதித்திருக்கிறார்கள்,
கல்வித்தந்தைகளாக,
கற்பகத் தருவை ஏந்தியபடி,
கண்டவுடன் குலை நடுங்கியது
கலை மகளுக்கு!

சங்கடத்தில்
நெஞ்சுக் கூசியது,
சாராய ரவுடிகளைக்
கொந்சுவதற்கு!

ஆனாலும் என்ன செய்ய,
அர்ச்சனை பாடி
தட்சணை கேட்பது
அரசாங்கமாச்சே!

வீறு கொள்ள வேண்டிய
வீணை நரம்புகளை
அடக்கி வாசித்துப் பழகினாள்!

கற்பகத் தருவெல்லாம்
அங்கங்க முளைச்சு
ஆலமரமா வளர்ந்தது!
அந்த நிழலுல
அடிபட்டுப் போச்சு
அரசுக் கல்வி!
ஆயிரங்கள வாங்கி
அலுத்துப் போச்சு!
லட்சிய மெல்லாம்
லட்சந்தான்னான்!

சரக்கு வித்து
சரசுவதியைப் புடிச்சான்,
சரசரன்னு வளர்ந்து
சர்க்காரையும் புடிச்சான்!

இலவசக் கல்விய
இழுத்து மூடத்துடிச்சான்!

துட்டுக் காரனுக்குப்
பட்டு மெத்தையை விரிச்சவன்,

சாமானிய மக்களை
சவக்குழிக்குப் போங்கிறான்!

கல்லூரியின்னு
கல்லறையைக் கட்டுறான்,

காமதேனுவா நினைச்சுக்
காசாக் கறக்குறான்!

கடுப்புக் காட்டினா
செருப்பக் கழட்டுறான்!

செவத்து மறைப்புல
செய்யறத மறைக்கிறான்!

ஆசையைக் காட்டி
காசை அள்ளிக் குவிக்கிறான்!

காசக் காட்டி
கவர் மெண்டை வளைக்கிறான்!

இலவசக் கல்வியை
இழுத்து மூட வைக்கிறான்!

புழுத்தக் கல்வியை
காசா பழுக்க வைக்கிறான்!

சலிச்சுப் போன் சனமெல்லாம்
உச்சு கொட்டுது,
உர்ருன்னு பாக்குது,
சத்தம் போடுது,
இரத்தம் கக்குது,
சிவப்பு வந்தவுடன்
சீறி நிக்கப் போகுது
உளுத்துப் போன
கவர்மெண்ட உடைக்கப்போகுது!!

– செஞ்சுடர்

3 Responses

 1. நண்பரே, கவிதை தலைப்பை கண்டு ஆர்வமாய் உள்ளே வந்தேன். தட்டச்சு செய்யாமல், புகைப்பட நகலாக வெளியிட்டிருப்பது ஏமாற்றமளித்தது. எங்கள் சிரமம் உணர்ந்து, தங்கள் சிரமம் கருதாது தட்டச்சு செய்து வெளியிடுங்கள். என்ற வேண்டுகோளுடன்,
  தமிழினி.

 2. முன்பு, தவிர்க்க முடியாத காரணத்தால் புகைப்பட நகலாக வெளியிட்டு இருந்தோம். ஆனால், பதிப்பை படிக்க முடியாமல் போவதை இப்போது உணர்ந்து உள்ளோம். இப்பிரச்சனையை எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி. இப்போது கவிதை தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளோம்.

  தோழமையுடன்
  புமாஇமு

 3. // கல்லூரியின்னு
  கல்லறையைக் கட்டுறான்,

  காமதேனுவா நினைச்சுக்
  காசாக் கறக்குறான்!

  கடுப்புக் காட்டினா
  செருப்பக் கழட்டுறான்! //

  நல்லாச் சொன்னீங்க செஞ்சுடர்!

  ஆதி தொட்டு அந்தம் வரை சந்தநயத்தோடு சொல்லியிருக்கீங்க! தொடர்ந்து வரும் தங்கள் கவிதைகளுக்காய் காத்திருக்கிறேன்.
  -தமிழினி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: