பாசிச ஜெயா அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள்

தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, [...]

மக்களுக்கு கட்டண உயர்வு! ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளுக்கு 9 கோடியா..

குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது. இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது. மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு. [...]

பாசிச ’ ஜெயாவை ’முச்சந்தியில் நிறுத்திய பு.மா,.இ.மு-வின் பிரச்சாரம்!

பால்,பேருந்து,மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலையினை மிக கடுமையாக உயர்த்தி கட்டணக்கொள்ளையினை அறிவித்த பாசிச ஜெயாவை பேருந்துகளில் ஏற்றி மக்களிடம் “பாசிச ஜெயா அரசின் வழிப்பறிக் கொள்ளையை முறியடிப்போம்! அதன் முதற்படியாக டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்!” என்று அறைகூவி பிரச்சாரத்தை மேற்கொண்ட சென்னை பு.மா.இ.மு தோழர்கள், கடந்த வாரம் பாசிச ஜெயா வை தெரு முச்சந்தியில் நிறுத்தினர் அம்பலப்படுத்தினர்.  தாங்கள் செயல்படும் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.மா.இ.மு தோழர்கள், முதலில் பறை அடித்து ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களிடம் [...]

எழும்பூர் குழந்தைகள் மருத்துவனை தீ – ஜெயாவின் குழந்தைகள் மீதான நீலிக்கண்ணீர் அம்பலம்!

தனியார் மருத்துவமனைகள் இலாபவெறிக்காக, அரசு மருத்துவமனைகள் உரிய கவனிப்பின்றி சீரழிப்பது என்ற அரசின் கொள்கை முடிவினால் ஏற்பட்ட தீ தான் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பற்றி உள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு வழங்கவேண்டிய சேவை என்பதிலிருந்து அரசு விலகி அனைத்தும் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கானது என்ற தனியார்மயம்,தாராளமகயம், உலகமயம் என்ற கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்ட தீ இது. இப்படி அரசு குழந்தைகள் மருத்துவமனைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், கோட்டூர்புர நூலகத்தை, [...]

வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

ஆவடி பிராட்வே.. ஆர்.எஸ்.ஒய்.எஃப். அவர் வே.. ஆவடி பேருந்து நிலையம், ஜெயலலிதா சசிகலா முகமூடியணிந்த இருவர் திடீரென ஒரு பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேருந்து கட்டண உயர்வு, பால், மின்சாரம் விலைவாசி உயர்வை தெனாவெட்டாக அறிவிக்கிறார்கள். திகைப்பிலும், வெறுப்பிலும் மக்கள் பார்த்திருக்க, மக்களின் உணர்ச்சிக்கு முகம் கொடுப்பது போல பத்து பதினைந்து சிவப்புச் சட்டைகள் பேருந்தில் ஏறி முழக்கமிடுகிறார்கள். “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு பதிலடி கொடுப்போம், புலம்பினால் மட்டும் போதாது! போர்க்குணத்துடன் [...]

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவை செருப்பால் அடித்து போராடிய திருச்சி ம.க.இ.க தோழர்கள் கைது!

தொடர்புடைய பதிவு: பாசிச ஜெயாவின் பகற்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! விழுப்புரம் புமாஇமு, விவிமு தோழர்கள் ஆர்ப்பாட்டம்! கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு! – பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயாவின் பகற்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! விழுப்புரம் புமாஇமு, விவிமு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் பு.மா.இ.மு,வி.வி.மு சார்பாக 21.11.11 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்புடைய பதிவுகள்: கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு! பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்! விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! பத்திரிக்கை [...]

கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு!

திருச்சியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் ஆண்கள் பெண்கள் 52பேர் மட்டுமல்லாமல் கை குழந்தைகள் 7 பேரையும் சேர்த்து மொத்தம் 59பேரை சிறையில் அடைத்துள்ளது பாசிச வெறிபிடித்த ஜெயா அரசு. இதனை கேள்விப்பட்ட மக்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயலலிதாவை வசை பாடுவது மட்டுமல்லாமல் ஓட்டுப்போடாதீங்கன்னு அப்பவே இந்த தம்பிங்கெல்லாம் சொல்லுச்சே கேட்களையே இப்ப இந்த பேய்க்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோமுன்னு வேதனையுடன் ஒரு பெண்மணி கூறினார். போராட்டம் ஓயாது தொடரும்……. கரூர் – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்: [...]

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு.சார்பாக நேற்று (22.11.11) காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். நூற்றுக்கனகான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றிருந்தனர். முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்னெதிர முழக்கமிடப்பட்டது. அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம் ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண்மணி நான் தான் ஜெயலலிதா [...]

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

-தினமணி 22.11.11 பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தியாகராயநகரில் மறியல் தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடம் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்யப்பட்டு, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். – தினத்தந்தி தொடர்புடைய பதிவுகள்: பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers