ஆதிக்க அணு உலை அடங்காது… இடிந்தகரை!

  பொய்யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதுவழி ஒன்றிருந்தால் நாராயணசாமி வாயிலிருந்தே நாலாயிரம் மெகாவாட்டும் அப்துகலாம் வாயிலிருந்து ஆராயிரம் மெகாவாட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும். அன்றாடம் இவர்கள் அவிழ்க்கும் பொய்கள் அணுவுக்கே அடுக்காது… அணுக்கழிவே சகிக்காது. வளர்ச்சி என்பதற்காய் புற்று நோயை ஏற்க முடியுமா ? அறிவியல் சுகம் அடைவதற்காய் மின்சாரத்தை முத்தமிட முடியுமா ? – நூலில் இருந்து *************** தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல் விலை: ரூ. 10 நூல் கிடைக்குமிடங்கள்: புதிய கலாச்சாரம், 16, [...]

கூடங்குளம் அணு உலையை மூடு! – சிறு வெளியீடு!

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு ! விலை: ரூ. 5 இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்! அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு! பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும் அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்! அணு மின்சாரத்தை விட [...]

முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதார தடை போடு! விலை: ரூ. 5 பக்கங்கள் : 16 தமிழக உழைக்கும் மக்களே! * முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், 5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும் அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்! * கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்! பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்! * அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்! * கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு அடையாள ஆதரவு [...]

வணிகமயக் கல்வி – இலவசக் கல்வி குறித்த கேள்விகளும் பதில்களும்! – இளஞ்செழியன்

தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக பெற்றோர்களும், மாணவர்களும் தினந்தினம் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனியார் கல்விதான் தரமானது, அரசு கல்வி தரங்கெட்டது  என்று ஒரு மாயையை உருவாக்கி இச்சமூகத்தின் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வியை மறுத்துவரும் இந்தக் கொடிய ஏற்றத்தாழ்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ”சமச்சீர்” கல்வி இச்சமூகத்திற்கு அவசியம் வேண்டும். கேள்வி; சமச்சீர் கல்வி என்றால் என்ன?   பதில்; ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இன்றியும், கொடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் [...]

இவர் தான் லெனின்

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 2. வறுமையை ஒழித்த லெனின் 3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் 4. வக்கீல் உருவில் ஒரு போராளி! 5. லெனின் தேர்வு செய்த பாதை 6. போராட்டமே வாழ்க்கையாக…! 7. சைபீரியச் சிறைவாசம் 8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின் 9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள் 10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி 11. சதியை முறியடித்த லெனின் 12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி 13. [...]

பகத்சிங் -ஒரு அறிமுகம்

பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது. .. 1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers