மக்களுக்கு கட்டண உயர்வு! ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளுக்கு 9 கோடியா..

குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது. இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது. மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு. [...]

பஞ்சாப் பள்ளிக்கூட மாணவர்கள் பட்டினி: ஒளிரும்’ இந்தியாவின் மறுபக்கம்!

இந்தியாவின் கோதுமை களஞ்சியம் என்றழைக்கப்படும் பஞ்சாப் மாநிலத்தில் கூட விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலை உயர்வினாலும்,  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் கூலி ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகி விட்டது. பெரும் பண்ணையார்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கொளுக்க வைக்க இப்படி கூலி ஏழை விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய ஆளும் வர்க்க கும்பல் தற்போது பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவிற்கான நிதியை கூட தேர்தல் விளம்பரத்திற்காக மாற்றிவிட்டு மாணவர்களை பட்டினி போடுகிறது.  ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பாஜக-வின் [...]

கூடங்குளம்: அமெரிக்க விசுவாசத்தில் மன்மோகனை மிஞ்சும் அப்துல் கலாம்!

பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கான கூடங்குளம் அணு உலையினை மூடக்கோரி போராடுவோரை இனியும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் அப்போராட்டம் நாடு முழுவதும், நாம் அணு உலை கட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குங்கள். நான் சொன்ன 200 கோடி திட்டத்தை’(அயோக்கியத்தனத்தை) நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்துல் கலாம். ஒய் திஸ் கொலவெறி… போராட்டக்காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கலாம் , [...]

முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன் ‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார். அதில், அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி [...]

அணு மின்சாரம் மிகவும் மலிவானது, பாதுகாப்பானது என்பவர்களை காறி உமிழும் செய்தி!

அணு உலை மின்சாரம் மிகவும் பாதுகாப்பானது, மலிவானது என அண்டபுளுகு பிரச்சாரத்தை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பரப்பி வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அதற்கு இதோ சிறந்த உதாரணம்! ஃபுகுசிமா அணு உலையில் இருந்து எரிபொருளை வெளியேற்ற மட்டும் 78400 கோடி ரூபாய் பணம் மற்றும் 40 ஆண்டு காலங்கள் ஆகும் என்ற ஆய்வு அறிக்கை. எரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தான் இந்த பாடு. எடுத்த பின் அதனை சுற்றுசூழலுக்கு ஆபத்து இல்லாமல் அப்பறப்படுத்துவது பற்றி இனிமேல்தான் யோசிக்க [...]

பகவத் கீதை: ரஷியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய விஷக்கிருமி!

ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது. மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது. வன்முறையின் கீழ் [...]

அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில், கோயில்களில் கழிப்பறை கட்டும் ஜெயா அரசின் வக்கிரம்!

அரசுப்பள்ளிகளி குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வக்கில்லாத ஜெயா அரசு, கோயில்களுக்கு 5 கோடியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளது. உலக வங்கி ஆணைக்கு இணங்க கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை வழங்குவதிலிருந்து அரசு விலகிகொள்ளும் அதே வேளையில் கோயில்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது பார்ப்பனீய ஜெயாவின் வக்கிரமே. தொடர்புடைய பதிவுகள்: அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் ஆணை! எழும்பூர் குழந்தைகள் மருத்துவனை தீ – [...]

எழும்பூர் குழந்தைகள் மருத்துவனை தீ – ஜெயாவின் குழந்தைகள் மீதான நீலிக்கண்ணீர் அம்பலம்!

தனியார் மருத்துவமனைகள் இலாபவெறிக்காக, அரசு மருத்துவமனைகள் உரிய கவனிப்பின்றி சீரழிப்பது என்ற அரசின் கொள்கை முடிவினால் ஏற்பட்ட தீ தான் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பற்றி உள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு வழங்கவேண்டிய சேவை என்பதிலிருந்து அரசு விலகி அனைத்தும் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கானது என்ற தனியார்மயம்,தாராளமகயம், உலகமயம் என்ற கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்ட தீ இது. இப்படி அரசு குழந்தைகள் மருத்துவமனைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், கோட்டூர்புர நூலகத்தை, [...]

வால்மார்ட்-க்கு அனுமதி :அண்ணாச்சி கடைகளுக்கு பூட்டு போட மத்திய அரசு முடிவு!!

நாட்டை மீண்டும் காலனியாக்கும்,  மறுகாலனியாக்க வேலையில் மத்திய அரசு தற்போது மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு, அணுசக்தி துறையில் பன்னாடு கம்பெனிகள் & தரகு முதலாளிகளுக்காக முழுவீச்சில் நடவடிக்கை என அடுத்த அதிரடியாக சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடிஅன்னிய முதலீட்டை அனுமதித்து ஒப்புதல் அளித்து உள்ளது.  ஏற்கனவே இங்குள்ள அம்பானி போன்ற தரகு முதலாளிகள் கையில் சிக்கி கொண்டு இருக்கும் சில்லறை வணிகத்தை மொத்தமாக மொட்டை அடிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது. [...]

விலை உயர்வினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என அம்மாவுக்கு தெரியாது – தினமணியின் பூணல் பாசம்!

பால்,பேருந்து,மின்சாரம் உள்ளீட்டவை கட்டண உயர்வு கடுமையாக இருந்தால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என சுட்டிக்காட்டாதது அதிகாரிகள் செய்த தவறு. ஆனால் பாவம் முதல்வர் அதிகாரிகள் பேச்சை கேட்டு விலையை உயர்த்தி  மக்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். – தினமணி பெட்ரோல் இரண்டு ரூபாய் கூட்டியதற்கே ‘வெந்த பூண்ணில் வேல் பாய்ச்சுவது’ என்று மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என கூறி மத்திய அரசை எதிர்த்து அறிக்கை விட்டவருக்கு பாதிக்கு பாதி பொருட்களின் விலையை உயர்த்தினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பது கூட தெரியவில்லையா? இது [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers