அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன் தருவதை படிக்க வேண்டும், நம் தினச்சாவு கூட – இனி அணுச்சாவாகவே அமைய வேண்டும் எனும் அமெரிக்க திமிரின் ஆதிக்க குறியீடே, கூடங்குளம் அணு உலை ! போராடும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இக்கவியரங்கம்… அனைவர்க்கும் வணக்கங்கள். *** இடிந்தகரை உணர்ச்சிகள் ஒரு கவிதைக்குள் அடங்குமா ? தெக்கத்தி [...]

மீண்டும் நண்பனுக்கு ஒரு கடிதம்!

என் அன்புள்ள நண்பனே, ஈராண்டுகளுக்குப்பின் உனை மீண்டும் சந்திக்கிறேன் இதோ இப்போது அதே புரட்சி நாளில்……   அன்றும் இன்றும் எத்தனையோ எவ்வளவோ மாறிவிட்டன சொன்னால் நம்ப மாட்டாய் கண்டிப்பாக நீயும் நானும் கூட மாறித்தான் போயிருக்கிறோம்….   “நீ பேசுற பேச்சுக்கு ஜெயிலுக்குத்தான் போவ – உனக்கு களி திங்குற காலம் வந்திடுச்சு” கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை ஆனால் உன் வாக்கு பலித்துவிட்ட்து நண்பா! ஒரு வேளை நீ வசிட்டன் ஆகிவிட்டாய்யா என்ன?   [...]

ஓ ! நக்சல்பரி …

      ஓ !  நக்சல்பரி … எங்கள் காடுகள் பூத்தாய் காற்றினில் சிலிர்த்தாய் வயல்வெளி வியர்த்தாய் மலைகளில் வீசினாய் நதிகளில் கலந்தாய் எங்கள் மண்ணின் உவப்பே நக்சல்பரி !     எங்கள் கைகளில் சிவந்தாய் கண்களில் வழிந்தாய் உதிரம் பெருகினாய் இதயம் நிறைந்தாய் நக்சல்பரி !   எங்கும் எதிலும் பொங்கும் பொலிவே நக்சல்பரி ! ஓ ! நக்சல்பரி…     – துரை.சண்முகம்

மவுனம்

மவுனம் நான் இப்போதேதும் பேசப்போவதில்லை பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன ஆனாலும் நான் இப்போது பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்……. நான் பேசாமலிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியைத் தரலாம் பேசாமலிருப்பது கோழைத்தனமாம் பேசவிடாமல் செய்வது வீரமாம் நான் கோழையாகவே இருந்து விட்டுப் போகிறேன் ஆனால் அது நிரந்தரமல்ல……. படிப்பிற்காக வேலைக்காக நான்  செல்லும் இடங்களிலெல்லாம் பதவியும் பணமும் என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன நான் மறுத்தாலும் ஊருக்குள் சென்றதும் என் காலணிகள் தானாய் கக்கத்தில் ஏறுகின்றன தேனீர்க்கடைகள் என்னை பிளாஸ்டிக் டம்ளர்களோடு வரவேற்கின்றன [...]

தங்கம் வேண்டாம் இனி இரும்பை உருங்குங்கள்! நாளை அவன் உயிரை எடுப்பதற்கு!

தங்கப்புராணம் தங்கம், அடிமைத்தனம்,முதலாளித்துவம் விவசாயம் நசிய நசிய கைத்தறி தேய தேய தங்கத்தொழிலாளி உருக உருக ஏறுகிறது விலை மட்டும் கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில் இன்னொன்றாய் மின்னுகிறது…. ஒன்றும் புரியவில்லை தங்கம் விலை ஏறுவதைப்போல…. அரிசி விலை  முப்பது ரூபா பருப்பு விலை அறுபது ரூபா தங்கவிலையோ ஏறுகிறது ஏறுகிறது எவெரெஸ்டின் உச்சியைத்தாண்டி அடேங்கப்பா பிளந்த வாய்கள் தப்பாமல் வரிசையில் நிற்கின்றன திருச்சிக்கும் வந்துவிட்டதாம் குமரன் தங்க மாளிகை…. பழையது புதியதாக மீண்டும் அது பழையதாக புதியதாக முளைக்க [...]

“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….”

அடையாளம் ஒரே பக்கத்தை காட்டி நிற்கின்றன.எல்லோரது கைகளும் கடந்துபோக அஞ்சி வெறிநாய் பின்வாங்கும் அந்தப் பாதையில் குதறப்பட்டுக் கிடக்கும் ஒருபெண்ணின் கைகள் குறிப்பாக அடையாளம் காட்டுகிறது “அதோ அவர்கள் அந்தப்பக்கம்தான்…..” பட்டப்பகலில் பணப்பையில் பிடுங்க வந்தவனிடமிருந்து தப்பித்து ஓடி பஸ்ஸாண்டு ரவுடிகளிடம் பாதுகாப்பாக ஒளிந்துகொண்ட அப்பாவி ஒருவரின் கைகள் அடையாளம் காட்டுகின்றன. “அதோ அந்தப்பக்கம்தான்…..” தறிகெட்டு ஓடிவரும் பன்றியின் கால்கள் பூக்கடை, பழக்கடைகளைத் தள்ளிவிடாமல் சென்றபிறகும் விரட்டிவசைபாடும் சாலையோர வியாபாரிகள் நிதானமாக வந்து எட்டி உதைக்கும் கால்களைப் [...]

விழித்தெழு என் தமிழகமே!

ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய கவிதை. இன்று அதே ஈழப்போராட்டத்தின் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்! என போராட அறைகூவி அழைக்கிறது. மருத்துவ மனைகள் மயான பூமிகளாய் கல்வி நிலையங்கள் கொலை களங்களாய் மழலைகளின் பிஞ்சு உடல்கள் ஊனங்களாய் மக்களின் வாழ்வு மரண போராட்டங்களாய் பற்றி எரியும் ஈழம் பதறி எழு என் தமிழகமே! அறுக்கப்பட்ட எம் பெண்களின் மார்பகங்கள் வெடிகுண்டிகளால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் யோனிகள் மின்சாரம் பாய்ச்சப்பட்டு [...]

“நம்முடைய விழாக்கள்”

ஏகாதிபத்தியங்களுக்கு பிரம்மாஸ்திரமாய் விளங்கும் இயேசுவின் கிறிஸ்துமசா நமக்கான விழா? இல்லை ஏகாதிபத்தியம் விழுந்தே தீரும் அதன் சிதிலங்களில் கம்யூனிசம் மிளிர்ந்து எழும் அதற்கான பாட்டாளிகளின் ஆயுதமே மார்க்ஸியம் என்று சூளுரைத்த மாமேதை மார்க்சின் பிறந்தநாளே நம்முடைய விழா..! பெற்ற தகப்பனை கணவனாய் கொண்டு படுக்கையை பகிர்ந்து கொண்ட சரஸ்வதியை கல்வி கடவுளாய் உயர்த்தும் சரஸ்வதி பூஜையா நமக்கான விழா? இல்லை அறிவு கூர்மையிலும் பண்பின் கருணையிலும் தன் வாழ்நாள் தியாகத்தாலும் படிப்பவர் மனதில் தாய்மையின் பாடங்களாய் பதிந்துபோகும் [...]

ஓயாது, அது ஓயாது, பட்டினிப் போர் ஓயாது!

ஓயாது, அது ஓயாது, ஓயாது பட்டினிப் போர் ஓயாது கொள்ளையர் கூட்டத்தின் ஆட்சி முடியும் வரை இந்த ஆயுதப் புரட்சி ஓயாது அது ஓயாது பாத்தி கட்டிய ஏர் பாத்திகள் என்னுடையது என்கின்றது நாற்றைக் நட்ட கைகள் அவை எங்களுடையது என்கின்றன கதிர்களை வெட்டும் அரிவாள் விளைச்சல் தனது என்கின்றது ஓயாது ஓயாது கன்னானின் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்றது குயவனின் அடுப்பு கனல்கின்றது பறை தான தான தான என ஒலிக்கின்றது ஓயாதது ஓயாது என அறிவிக்கின்றது காலில் [...]

சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது!

3ந்தேதி விடியற்காலை நேரம். சென்னையை முகாமிட்டிருந்த பேரிருள் தன் இருப்பை அகற்றி கொண்டு விரைவாய் மறைந்தோடியது. காலை கதிரவன் சிவந்து உச்சியேறிய நேரம். கடற்பரப்பு “பேரலைகளால் சலசலத்து கொண்டிருந்தன. எதைப்பற்றியும் கவலை படாத மக்கள் கூட்டம் அவசர வேலைகளில் தங்கள் அறிவை பறிகொடுத்து கொண்டிருந்தன. நாங்கள் ஓர் லட்சம் உறுப்பினர். நாங்கள் 5 இலட்சம் உறுப்பினர் நாக்ன்கள் 10 இலட்சம் உறுப்பினர். நாங்கள் தான் நம்பர் ஒன் இல்லை இல்லை நாங்கள் தான் நம்பர் ஒன் என்று [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers