கழிசடைத் தளபதி விஜயகாந்தும், புரட்சிக்காரன் ரமணாவும்

ரமணா படத்தில் வரும் ஒரு காட்சி: ரமணா சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவரைப் பற்றி கேள்விப்படும் மக்கள் அவரைப் புகழ்ந்து பேசுவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ஆட்டோ க்காரர் ஒருவர் பின்வருமாறு கூறுவார், ” நான் நாத்திகன்தான் ஆனால் ரமணா சாரோட படம் கிடைத்தால் அவரை கடவுளாக வைத்து கும்பிடுவேன்“, என்று. இதை குறிப்பிட்டு ரமணாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், மக்களுக்காக பல சேவைகள் செய்த நீங்கள் உங்களது படத்தையும் வெளியிடலாமே என்று கேட்பார். அதற்க்கு புரட்சிக்காரர்(??) ரமணா சொல்வார், [...]

அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன் !

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன? நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக [...]

கூரையே இல்லாத பள்ளிகளில் கூட சமச்சீர் கல்வி கிடைக்கும் – மு க-வின் சாதனைகள் தொடர்கிறது …

அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி ஒரே விதமான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வருவதாக மு. க கூறியுள்ளார். அதாவது, கோடிஸ்வர வீட்டு பிள்ளைக்கும், கூலி வேலை செய்பவரின் பிள்ளைக்கும் ஒரே தரத்திலான கல்வி கிடைக்கும். இந்த திட்டம் 1 ரூபா அரிசியை விட மிகப்பெரிய சாதனையாக மக்களுக்கு உதவும் என்று ஆலமரத்து ஆண்டி கணித்துள்ளார். சமச்சீர் கல்வி கிடைக்கும் பள்ளிகளின் கட்டங்களை கீழே பார்க்கலாம்… வேலம்மாள் மெட்ரிக் பள்ளி – சென்னை [...]

தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, [...]

தனியார் நிகர்நிலை பல்கழைகழகங்கள் – நவீன குறுநில மன்னர்களின் ஆட்சி பீடங்கள்

மன்னர்களின் ஆட்சியின் போது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். குறுநில மன்னனுக்கு வயது ஆகிவிட்டால், அவனுடைய வாரிசுகள் அந்த நிலப்பகுதியை ஆளவார்கள். அதேபோல் தான் இப்போது ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழகமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெறுகிறது. இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தான் தெரிவிக்கிறது (Times of India, 19/102009). ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழத்திற்கு கீழ் [...]

மன்மோகனின் இரட்டை வேடம் – விசுவாசம் & விஷவேசம்

1 ரூபா அரிசி வரமா? சாபமா?

“மாநில வேளாண் சட்டம்” நிறுத்தி வைப்பு – கருணாநிதியின் கபட நாடகம் ஆரம்பம்

மருத்துவ பணிகள் செய்வதற்கு மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தல், வக்கீல்களாக பணியாற்ற “பார் அசோசியேஷனில்’ பதிவு செய்தல் என உள்ளது போல, வேளாண்மை பணிகள் செய்வோர் பதிவு செய்வதற்காக “வேளாண் மன்றத்தை’ ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்டது.இதன்படி, தமிழகத்தில் வேளாண் சேவை அல்லது ஆலோசனை போன்ற பணிகளை யாராவது செய்ய வேண்டுமென்றால், இந்த மன்றத்தில் கட்டாயம் உறுப்பினராகி இருக்க வேண்டும்.மேலும், [...]

மகாரஷ்டிராவில் 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை

மகாரஷ்டிராவில் ஓட்டு பொறுக்கிகள் மும்மரமாக ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த வருடம், இதுவரை மகாரஷ்டிராவில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 638 (டைம்ஸ் ஆப் இந்தியா, 6/09/2009). விவசாயிகள், கொத்து கொத்தாக தற்கொலை செய்கின்றனர் என்றால், அது தான் கொடும் பஞ்சத்தின் முதல் அறிகுறி. அது ஓட்டுமொத்த சமூகமும் உணவின்றி வாடப்போவதற்கான எச்சரிக்கை.

அணுஉலையில் முதலீடு செய்வதோ பல்லாயிரம் லட்சம் கோடிகள் – நஷ்டயீடோ வெறும் 300 கோடிகள் மட்டும்

என்ன நம்ப முடிகிறதா? இது நாங்கள் சொல்லும் செய்தி அல்ல. முதலாளித்துவ பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா (25,07/2009, http://mobiletoi.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=10&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=25-07-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar01003&publabel=TOI) சொல்லும் செய்தி. அதாவது, அணுஉலையை இயக்கம் போது எதிர்பாராத விபத்து நிகழும் போது, அந்நிறுவனம் வெறும் 300 கோடிகள் மட்டும் நஷ்டயீடாக வழங்கும். அதற்கு மேல் வரும் செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கான மசோதா நாடாளமன்றத்தில் நிறைவேற்றபடவுள்ளது. இந்திய மக்களின் வரிபணத்தில் அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய முதலாளிகள் அடிக்கும் கொள்ளையோ பல்லாயிரம் லட்சம் கோடிகள். ஆனால், விபத்து நடந்து அதனால் மக்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers