சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார். ”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…” அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார். “ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?” ”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர் “உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான [...]

வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!

 நீங்கள் சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அடர்த்தியான  போக்குவரத்து நெரிசல். திடீரென உங்கள் முன்னே சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறார். கீழே சரிந்து சிதறி விழுகிறார். மண்டை பிளந்து ரத்தம் தெறிக்கிறது. உங்களால் அந்தக் காட்சியைப் பார்க்காதது போல கடந்து செல்ல முடியுமா? அல்லது யாரோ அறிமுகமற்ற நபராயினும் கண்ணெதிரே ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் சரிந்து விழுவதை நாம் கண்டு ரசிக்க முடியுமா? ஒரு வேளை இதெல்லாம் [...]

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

“”உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்”, என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers