பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்யும் வங்கிகள்!

நிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம். நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை [...]

அமெரிக்க மாமாவின் அன்பு பரிசு!

அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன?

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009). ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 [...]

அமெரிக்க வல்லரசு! ஆனால் 4.9 கோடி மக்கள் பட்டினி!

அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான [...]

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது. சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் [...]

ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோடி

சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் [...]

கட்டணக்கொள்ளை கொடுமையால் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்…

சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் [...]

பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள். “காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”. அப்போது, நான் Y2K [...]

முதலாளிகள் நலம் பெற 3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள், ஆனால் பள்ளி கல்விக்கோ வெறும் 29,000 கோடிகள் மட்டும்?

3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள்: அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கான புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.50 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் 70 சதவீத பணிகளை அரசு – தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு, மத்திய கட்டமைப்பு குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர். [...]

மகாரஷ்டிராவில் 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை

மகாரஷ்டிராவில் ஓட்டு பொறுக்கிகள் மும்மரமாக ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த வருடம், இதுவரை மகாரஷ்டிராவில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 638 (டைம்ஸ் ஆப் இந்தியா, 6/09/2009). விவசாயிகள், கொத்து கொத்தாக தற்கொலை செய்கின்றனர் என்றால், அது தான் கொடும் பஞ்சத்தின் முதல் அறிகுறி. அது ஓட்டுமொத்த சமூகமும் உணவின்றி வாடப்போவதற்கான எச்சரிக்கை.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers