திருநீர்மலை பேரூராட்சியே! சுகாதார சீர்கேட்டை சரி செய்!

  பேரூராட்சியே! ஊருக்கு நடுவே உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுசுவர் அமைத்துக் கொடு! ஆண்-பெண் இருபாலருக்கும் இலவசக் கழிவறைகள் கட்டி பராமரிப்பு செய்! உழைக்கும் மக்களே! அடிப்படை வசதிகளை பெற பேரூராட்சி நோக்கி அணிதிரள்வோம்!      

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்! “பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு. எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் [...]

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே ! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை ! போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற [...]

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க ..,

  கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க .., நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !  கல்வி கொடுத்த கவர்மெண்ட்டு கள்ளச் சாராயம் விற்குது பார் ! கள்ளச் சாராய ரவுடிகளெல்லாம்  கல்வித்தந்தை என்கிறான்  கல்வி நிலையம் நடத்துறான் ! அவமானம் !அவமானம் ! இதை அனுமதிப்பது அவமானம் !   கைது செய் !கைது செய் !  பல்கலைக் கழகம் என்று சொல்லி  கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த  மதிய அமைச்சர் ஜெகத்ரட்சகன்- ஏ.சி .எஸ் -தி .க .வீரமணி  கல்வி வியாபாரிகளைக் கைது செய் ! சிறையிலடை !சிறையிலடை ! குட்டி -புட்டி -பெட்டிக்கு  சோரம்போன அதிகாரிகளை  சிறையிலடை !சிறையிலடை ! முறியடிப்போம் !முறியடிப்போம் ! கல்வி வியாபாரமாவதை  முறியடிப்போம் !முறியடிப்போம் ! என விண்ணதிரும் முழக்கங்களுடன் பல கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 200  மாணவ -மாணவிகளைத் திரட்டி  கல்விக் கொள்ளைக்கு எதிராக ஒரு கம்பீரமான ஆர்ப்பாட்டத்தை கடந்த 27 [...]

ஆதி திராவிட விடுதி மாணவிகள் சோற்றுக்கு -திண்டாட்டம் ! ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரோ தலைமைச் செயலகத்தில் -செம்மொழி கொண்டாட்டம் !

சேலம் மாவட்டம் மேட்டூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது அரசு மாணவியர் விடுதி. இந்த விடுதிக்கான கட்டணத்தை அரசு செலுத்தாததால் கடந்த 4 ந் தேதி மூடப்பட்டுள்ளது அரசுப்பள்ளி -கல்லூரிகளை மாட்டுத் தொழுவங்களாகவும் ,அரசு மாணவ-மாணவர் விடுதிகளைகுப்பைத் தொட்டிகளாகவும் பாம்பு புத்துகளாவும்,அரசு மருத்துவமனைகள் சுடுகாடுகளாகவும் மாற்றி உழைக்கும் மக்களை ‘பலி’கொடுத்துவரும் அரசு இந்த நாட்டை வல்லரசாக்கப் போகுதாம் .வல்லரசு கனவு காணச் சொல்லும் இந்த அரசு மாணவர்களுக்கு வழங்கும் சேவை மேட்டூர் சம்பவம் ஒரு சான்று .

மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்! காக்கிச்சட்டைகளின் ரவுடித்தனத்தை முறியடிப்போம்!

சமசீர் கல்வி குறித்த அரங்க கூட்ட அழைப்பிதழ்

சமசீர் கல்வி குறித்த அரங்க கூட்ட அழைப்பிதழ் நாள்:      13/10/2009, செவ்வாய்கிழமை நேரம்:  காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்:   மாநகராட்சி சமுதாயக்கூடம், சேத்துப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் திடல் அருகில் தலைமை:  தோழர் ச. பரமானந்தம், மாநில ஒருகிணைப்பாளர் புமாஇமு சிறப்புரை: கல்வியாளர் திரு. s. s. ராஜகோபாலன் கவிஞர் தோழர் துரை. சண்முகம், மகஇக அனைவரும் வருக இவன், பு மா இ மு, மின்னஞ்சல் :rsyfchennai@gmail.com [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers