ஆயுதபூசை! (கவிதை)

அதிர்ச்சியாகத்தான்இருந்தது!இருக்காதா பின்னே,பகத்சிங் பிறந்த நாளன்றுஅரசு விடுமுறை! எப்படி சாத்தியம் இது?அவனென்ன,காந்தியா?கதராடை உடுத்தி,மக்களின்கோவணம் உருவ!வெள்ளைக்காரன்,கால் நக்கிமெடல் வாங்க! என்னதான் நடந்தது,நடந்தபடியே யோசித்த போதுஞாபகம் வந்தது,நேற்றுஆட்டோக்கார “காம்ரேடு”கடலை பொரி கொடுத்தாரே!அடடே!ஆயுத பூசை! என்ன பொருத்தம்? தூக்கியதுப்பாக்கியை மட்டுமல்ல,தன்வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,வாரிசுகளிடம்வழங்கியவனின்பிறந்தநாளில்வாழத்துடிக்கிறோம்வற்றாத,அவன் நினைவுகளைப் போல! இன்னும்,தெரிந்து சிலரும்தெரியாமல் பலரும்கொண்டாடுகிறார்கள்ஆயுத பூசை! யாருக்கான ஆயுதம்யாருக்கான பூசை? சும்மாவே இருந்து,சோறு தின்று,தொந்தி வளர்ப்பவனுக்குதிரிசூலம் ஆயுதமென்றால், ஊரையே வெளிச்சமாக்க,உயிரைப் பணயம் வைத்துஉயரக் கம்பங்களில்ஏறும் எமக்குசெருப்புதான் ஆயுதம்! கண நேரம்கடந்து செல்லும் முன்மூக்கைப் பிடிக்கச் செய்யும்உன்மலச்சாக்கடையில்,மூச்சடக்கி,மூழ்கி எழும் எமக்குமலவாளிதான் [...]

விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – அண்டப்பொய் விஷம பிரச்சாரம்

இந்து கோவில்களை மீட்க இயக்கம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேட்டி சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது (தினமலர் 22/09/2009): 1) அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது. 2) மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் [...]

பொன்னான ஆகஸ்டு பதினைந்து…

ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருக்கும் சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரிசூட் போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை! அயிட்டம் பாட்டுக்கு ஆடிச்செல்லும் அம்மணிகளை அழைத்து வந்து, அர்ஜூனின் ‘தேசபக்தி காவியங்களை’ திரையிட்டு, தொலைக்காட்சிகளும் கொண்டாடின ‘சுதந்திரதின’த்தை! இந்தக் கூத்துக்களுக்கு இது அறுபத்து மூன்றாமாண்டு. தொலைக்காட்சிக்குள்ளே தலையைவிட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பதில் எனக்கு அவ்வளவு சுவாரசியமில்லை. [...]

கையில காசு, வாயில தோச… ( கருத்துப்படம்)

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் – பத்திரிக்கை செய்திகளின் உண்மை முகம்

காஷ்மீர் மக்கள், தனது உரிமைக்காக போராடுவதை எவ்வாறு பத்திரிக்கைகள் மறைக்கின்றன என்பதையும், எவ்வாறு அம்மக்களின் மனித உரிமையை இந்திய இராணுவம் மீறுகின்றது என்பதை டெல்லியில் உள்ள காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தோடு தொடர்புடைய உமா சக்ரவர்த்தி அம்பலப்படுத்துகிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 14/09/2009). – பத்திரிக்கைகள் உண்மையான செய்தியை முழுமையாக தருவதில்லை. அவை, சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகின்றன. இவை, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை, காஷ்மீர் பிரச்சனை அம்மக்கள் தேர்தலில் வாக்களித்ததால் முடிந்துவிட்டது [...]

பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள். “காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”. அப்போது, நான் Y2K [...]

தாலி கட்டிக்கொள்ளாமல் மதுரவாயல் ரோட்டில் நடந்த புரட்சிகர திருமணம்

முதலாளிகள் நலம் பெற 3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள், ஆனால் பள்ளி கல்விக்கோ வெறும் 29,000 கோடிகள் மட்டும்?

3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள்: அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கான புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.50 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் 70 சதவீத பணிகளை அரசு – தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு, மத்திய கட்டமைப்பு குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர். [...]

1 ரூபா அரிசி வரமா? சாபமா?

அந்திநேர பூபாளம்!

இனிமையாகத்தான்இருந்திருக்கும்எல்லாருக்கும் எப்போதாவது,சொந்த ஊருக்குச்செல்வதென்பது! ஏதோ,இழவு வீட்டிற்குச்செல்வது,போன்ற துயரம்கவ்விக் கொள்கிறதுஎனக்கு மட்டும்! யாரைப் பார்த்தாலும்,“என்ன பொழப்பு இது,செத்த பொழப்பு”என்று அலுத்துக் கொள்ளும்,ஊருக்குத்துள்ளிக் கொண்டாபோகமுடியும்? கடலை விளைந்த,சாலையோர வயல்கள்எல்லாம்,கல்லறை போல,கற்கள் முளைத்து,காமாட்சி, மீனாட்சிஎன புதிய நகர்களைப்பிரசவித்திருக்கின்றன! கரம்பு வயல்களில்,கணுக்கள் வெட்டப்பட்டு,கழுத்து வலிக்குமளவு,வளர்ந்து நிற்கின்றன,சவுக்கு மரங்கள்காகித ஆலைகளுக்கென! நான்கைந்து வாரங்களாய்,தண்ணீரின்றி,நாசமடைந்து நிற்கிறதுநவீனக் கரும்பு வயல்,நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு! தாய் மனத் தலைவனின்பால்விலை உயர்வுச்செய்தியைக் கூட அறியாமல்,துருத்திய எலும்புகளுடன்தேடியலைகின்றனகாய்ந்த புற்களை,பால் வற்றியப் பசுக்கள்! ஊரே சுடுகாடு போலக்காட்சியளித்தாலும்,உள்ளூர சந்தோசம்தான்இன்னும் யாருமேதூக்கில் தொங்கவில்லை! கடனை வாங்கியாவது,கல்லைக் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers