ஒரு நாட்டின் எதிர்காலம், இளைய தலைமுறையால் நிர்ணிக்கப்படுகிறது. சரி, மக்கள் தொகையில் 40% ஆக உள்ள 18 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே. இந்த பிச்சை காசு எதற்கு உதவும்?
தேசிய குழந்தைகள் நலயுரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை (டைம்ஸ் ஆப் இந்தியா, 30/06/2009):
குழந்தைகள் குறைந்தபட்ச சுகாதார வசதியோ, கல்வி அறிவோ பெறவில்லை. இதனால், சத்து பற்றாக்குறை நோய், கல்வியறிவின்மை, குழந்தை தொழிலாளர்கள், போன்ற கொடுமைகள் நாட்டில் உள்ள 80% குழந்தைகளை பாதிக்கிறது.
80% குழந்தைகள் உடல் நலக்குறைவாக உள்ளனர். 45% குழந்தைகள் உடல் போதிய உணவில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிறந்த குழந்தைகளில் 1000-க்கு 67 குழந்தைகள் இறந்துவிடுகின்றனர் (இது பங்களாதேஷ்யில் 1000-க்கு 46 மட்டுமே).
18 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, உணவு, கல்வி, பாதுகாப்பு போன்றவைகள் மறுக்கப்படுகிறது.
முதலாளிதுவ அறிவுஜீவிகளே பதில் சொல்லுங்கள்…
பொருளாதார வளர்ச்சி என்பது, நாட்டில் உள்ள 40% குழந்தைகளுடன் சம்மந்த பட்டதா அல்லது இல்லையா?
பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் உள்ள அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பதற்க்காக, நாட்டின் பொருளாதாரத்தை தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக தான் திட்டமிடப்பட வேண்டுமா?
பொருளாதார வளர்ச்சி வீதம் என்பது பச்சிழம் குழந்தைகளின் இரத்தத்தின் மீதும், சதையின் மீதும் தான் வளர வேண்டுமா?
Filed under: அடிப்படை உரிமை,அரசியல்






