குத்தாட்டமே டைஃபியின் ‘கலாச்சாரப் புர்ர்ரட்ச்ச்சி”

“அரியலூர்  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக… தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி…” என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம்.  அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின் படத்தை வேறு போட்டிருந்தார்கள், அந்த பிரசுரத்தில். அட, வேறு யாருமில்லீங்க! நம்ம டைஃபி (DYFI) பங்காளி(லி)ப் பசங்கதான் இதுக்கெல்லாம் ஏற்பாடாம்.  வந்த ஆத்திரத்தை திட்டி தீர்த்துரலாமுன்னு டைஃபி மாவட்ட செயலரு ஆர்.செல்லபாண்டியனுக்கு போன் போட்டு “”டைஃபி சார்பா என்ன எழவ வேணாலும் [...]

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன். தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும், ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும், தனது ஆடை ஆபரணங்களையும், பொக்கிஷங்களையும், அடிமைகளையும் தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன். பூவுலக வாழ்வைச் சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை. ஆசை நிறைவேற்றப்பட்டது. பிறகு அவனுடைய வாரிசுகளும் அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு; சாட்சி – எகிப்திய பிரமிடுகள். ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி [...]

இவர் தான் லெனின்

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 2. வறுமையை ஒழித்த லெனின் 3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் 4. வக்கீல் உருவில் ஒரு போராளி! 5. லெனின் தேர்வு செய்த பாதை 6. போராட்டமே வாழ்க்கையாக…! 7. சைபீரியச் சிறைவாசம் 8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின் 9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள் 10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி 11. சதியை முறியடித்த லெனின் 12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி 13. [...]

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

மூஞ்சப் பாரு! கொள்கையப் பார்க்காதே! கொள்கை கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள் “இது கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி” என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். “”தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு பங்கேற்பு என்பது நிலைப்பாடு” என்றார். திருமாவை வை.கோவுக்கு மொழிபெயர்த்தால், கொள்கை என்பது கோட்பாடு, அரசியல் என்பது நிலைப்பாடு என்று பொருள் வருகிறது. இன்று போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே [...]

பகத்சிங் -ஒரு அறிமுகம்

பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது. .. 1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் [...]

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

அன்பார்ந்த நண்பர்களே ! வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை: எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers